மம்பட்டியான் ஸ்டார்ஸ் -இணையத் தொடர் விமர்சனம்

கிரிக்கெட் ரசிகர்கள் நிறைந்த அந்த கிராமத்தில் வைபவ் முருகேசன், வெங்கட பாலமுரளி, ஜகபர் சாதிக் மூன்று பேரும் நண்பர்கள். அதோடு மட்டுமின்றி
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனியின் தீவிர ரசிகர்களும் கூட .
நண்பர்கள் மூவரும் கேப்டனாக இருந்து ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ என்ற கிரிக்கெட் அணியை வழி நடத்துவதோடு, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விளையாடி வெற்றி பெற்று வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக, தங்களது கிராமத்தில் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியில் இவர்களது அணியும் பங்கேற்று விளையாடி வருகிறது.
இவர்களுக்கு சென்னையில் தங்கள் அபிமான
கிரிக்கெட் வீரர் டோனி விளையாடும் கடைசி கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க ஆசை.
அதனால் தங்கள் ஊரில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.
இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று பரிசுத் தொகை ரூ.50 ஆயிரத்தை வென்று, அதன் மூலம் சென்னையில் நடக்கும் கிரிக்கெட் போட்டியை பார்க்கலாம் என்று திட்டம் போட, எதிர்பாராத விதமாய் ஊர்த் தலைவர் திடீர் மரணத்தால் இறுதிப் போட்டி நடத்தப்படாமல் நின்று விடுகிறது. இதனால், ஊர் தலைவரின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் கிரிக்கெட் போட்டியின் ரன்னர் பரிசுத் தொகை ரூ. 30 ஆயிரத்தை திருடி, அதை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் வாங்க அனுப்பி விடுகிறார்கள். டிக்கெட் கிடைத்த மகிழ்ச்சியில் மூன்று நண்பர்களும் சென்னைக்கு செல்ல, அவர்களுடன் வைபவ் முருகேசனின் முன்னாள் காதலியான லாவண்யாவும்
செல்கிறார்.

தங்களது அபிமான நாயகன் விளையாடும் போட்டியை நேரில் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருப்பவர்களுக்கு தங்களிடம் இருக்கும் டிக்கெட்
போலி என்று தெரிந்ததும் அதிர்ச்சியடைகிறார்
கள்.
ஆனாலும் ஆசை விடுமா? எப்படியாவது தங்கள் ஆதர்ச நாயகன் ஆடும் போட்டியை நேரில் பார்த்துவிட்டு தான் ஊருக்கு திரும்ப வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள்.
அடுத்த போட்டி நடப்பதற்குள் அதற்கான பணத்தை தயார் செய்யும் முயற்சியில் இறங்க, அதில் ஒரு கட்டமாய் கிரிக்கெட் சூதாட்டம் நடத்தும் கும்பலிடமும் சிக்கிக் கொள்கிறார்கள்.. அதனால் பல்வேறு சிக்கலில் சிக்கிக் கொள்கிறார்கள். அதில் இருந்து மீண்டு, அவர்கள் நினைத்தது போல், அவர்களது டோனி விளையாடும் போட்டியை நேரில் பார்த்தார்களா ? இல்லையா ? என்பதை 6 அத்தியாயங்களில் சொல்வதே இந்த ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’.

கிரிக்கெட் விளையாட்டின் துல்லி யமான தகவல்கள் மற்றும் கிரிக்கெட் போட்டியை வைத்து நடத்தப்படும் சூதாட்டம் பற்றிய.விவரங்கள் அனைத்தையும் மிக தெளிவாகவும், உண்மைக்கு நெருக்கமாகவும் சொல்லி இருப்பதில் சிறப்பு கவனம் பெறுகிறது இந்த இணையத் தொடர்.

தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் வைபவ் முருகேசன், லாவண்யா , வெங்கட பாலமுரளி மற்றும் ஜகபர் சாதிக் ஆகியோர் உண்மையான நண்பர்கள் போலவே தொடர் முழுவதும் வலம் வருகிறார்கள். அதுவும் கூட தொட ருடன் நம்மை நெருக்கமாக இணைத்துக் கொள்கிறது.

வைபவ் முருகேசனின் முன்னாள் காதலியாக நடித்திருக்கும் லாவண்யா, தனது நடிப்பால் அந்த கேரக்டருக்கு புது வடிவம் கொடுத்திருக்கிறார். தனக்கான விருப்பம் எதுவும் கேட்கப்படாமல் பெற்றோரின் கட்டுப்பாட்டு வளையம் ஒரு பக்கம். காதல் என்று வந்த பிறகு காதலன் போடும் கட்டுப்பாட்டு வளையம் இன்னொரு பக்கம். ஆனால் இது எதிலும் சிக்காமல் தனக்கான சிந்தனை, தனக்கான வாழ்வியல் என்று சிந்திக்கும் புதுமைப் பெண் சாருவாக காட்சிகளில் அழகு வலம் வருகிறார். (இப்படி ஒரு கேரக்டரை
உருவாக்கியதற்கா
கவே இயக்குனருக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்)
இந்த கேரக்டரை அழகாக உள்வாங்கி நடிப்பில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் லாவண்யாவுக்கு விருது கொடுத்து கௌரவிக்கலாம்.

நான் கடவுள் ராஜேந்திரன், விவேக் பிரசன்னா, சம்பத் ராம், சரத் ரவி, ஹலோ கந்தசாமி ஆகியோரின் திரை இருப்பு இந்த இணைய தொடரின் கூடுதல் பலம்.
ஒளிப்பதிவாளர் பி.எம்.ராஜ்குமார் கிராமம் மற்றும் நகரத்தின் வித்தியாசங்களை அழகுற காட்சிப்படுத்தி இருக்கிறார்.

பரத் தனசேகரின் பின்னணி இசை இந்த தொடரின் இன்னொரு பலம். காட்சிக்கு காட்சி சும்மா புகுந்து விளையாடி இருக்கிறார் இந்த இசை நாயகன்.

சுதாகர், நவீன் ராஜ்குமார், கலைச்செல்வன், வினு கார்த்திகேயன் இணைந்து கதை திரைக்கதை எழுத,
இயக்கியிருக்கிறார், சவிர் சுதாகர்,
முதல் மூன்று அத்தியாயங்கள் நண்பர்களது வாழ்க்கை, கிரிக்கெட் மீதான அவர்களின் அதீத காதலை சொன்னவர், அப்படியே நட்பின் மேன்மையையும் சிறப்புற காட்சிப்படுத்தி இருக்கிறார். அடுத்த மூன்று அத்தியாயங்கள் அதே கிரிக்கெட் பின்னணியோடு இருந்தாலும், இதுவரை நாம் பார்த்திராத அல்லது அறிந்திராத கிரிக்கெட் சூதாட்ட உலகத்தை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது.
முடிவில் விளையாட்டு ஆர்வம்
தவறில்லை. தங்கள் அபிமான விளையாட்டு வீரர் மீதான வெறித்தன நேசம் மட்டும் வேண்டாம் என்பதை காட்சிப்படுத்திய அந்த கிளைமாக்ஸ், நிஜமாகவே மகுடம்.

பிளஸ்: கிரிக்கெட் சரிவர தெரியாத வர்களுக்கு கூட இந்தக் கதை பிடிக்கும் என்பது.

பிளாஷ்: கிரிக்கெட் சூதாட்டம் வர வரை சொல்லப்பட்ட இந்த கதைக்குள் அழகாக மிளிரும் பெண்ணியம்.

ரேட்டிங்: 7/10.

-இந்த இணைய தொடர் ஜூன் 26 முதல் zee 5 தளத்தில் காணக் கிடைக்கிறது.