லிங்கம்-இணையத் தொடர் விமர்சனம்

தமிழ் ஓடிடி தளங்களில் ‘விலங்கு’, ‘சுழல்’ போன்ற தொடர்கள் ஏற்படுத்திய தாக்கத்துக்குப் பிறகு, சீரியசான கிரைம் த்ரில்லருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது. இப்போது லிங்கம் இணையத் தொடர் அந்த காத்திருப்புக்கு நல்வரவாக அமைந்திருக்கிறது.

எழுத்தாளர் லட்சுமி சரவணகுமார் இயக்கத்தில் கதிர் நடிப்பில் வெளியாகியிருக்கும் 8 எபிசோடுகள் கொண்ட இந்த தொடர், 1987 முதல் 1996 வரையிலான காலகட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் நடந்த உண்மைச் சம்பவங்களைத் தழுவி உருவாகியுள்ளது. அதுவே தொடரை
ரசிகர்களிடம் இன்னும் நெருக்கமாக்கி விடுகிறது.

திறமையான கபடி வீரரான லிங்கத்துக்கு (கதிர்), போலீஸ் ஆக வேண்டும் என்பது வாழ்க்கை லட்சியம்.
ஆனால் எதிர்பாராத திருப்புமுனையாக, ஒரு கொலை வழக்கில் தவறாக குற்றம் சாட்டப்
பட்டு
செய்யாத குற்றத்துக்காக ஜெயிலுக்கு போகிறார்.
ஜெயில் தண்டனை முடிந்து
வெளியே வரும்
அவரது வாழ்க்கை முற்றிலுமாக திசை மாறுகிறது.
போலீஸ் கனவு கலைந்து போன நிலையில் காலம் அவரை முற்றிலும் வேறு மனிதனாக அதாவது ரவுடியாக மாற்றி வைக்கிறது.
போலீசாக விரும்பிய ஓர் இளைஞன்
இப்போது ஊரையே கதி கலங்க வைக்கும் ரவுடி. காலம் மாற்றிய இந்த கோலத்துக்கு பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.
ஓர் எளிய மனிதன் கேங்ஸ்டராக மாறும் கதைகள் தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல என்றாலும், அதை முடிந்தவரை நம்பகத்தன்மையுட
னும், நேர்த்தியாகவும் தந்து இருக்கிறார் இயக்குனர் லட்சுமி சரவணகுமார்.
இந்தத் தொடரின் முக்கிய தூண் கதிர் தான். ஆரம்ப எபிசோடுகளில் கபடி விளையாடும்போது காட்டும் எனர்ஜியும், சுற்றி இருப்பவர்கள் தன்னை பயன்படுத்திக் கொள்வதை அறியும்போது முகத்தில் அவர் காட்டும் வலி
யும் இந்த தொடருக்குள் நம்மை சுலபத்தில்
இழுத்துக் கொள்கிறது. ரவுடியாக மாறும்போது அவரிடம் ஏற்படும் மாற்றம் அவரது நடிப்பில் புதிய பரிமாணமாகவும் சுடர் விடுகிறது.
திரு கதாபாத்திரத்தில் நடித்துள்ள சத்யாவும் தனது பாத்திரத்தின் கனத்தை நடிப்பில் உணர வைக்கிறார்.
போஸ் வெங்கட், பூர்ணிமா ரவி, திவ்ய பாரதி உள்ளிட்டோரும் குறையில்லாத நடிப்பை வழங்கியுள்ளனர்.
தினேஷ் குமார் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு, குமரியின் நிலப்பரப்பையும், அந்த காலகட்டத்துக்கான நம்பகத்தன்மையை
யும் அழகாக கண் முன் கொண்டு வந்து விடுகிறது.
டோனி பிரிட்டோவின் இசை இசையை தொடருக்கு கிடைத்த கூடுதல் பலமாக உணர முடிகிறது.
லிங்கம் ரவுடி ஆவதற்கான பின்னணி இன்னும் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்க வேண்டும். இந்த சிறு குறையை தவிர்த்து பார்த்தால் இந்த லிங்கம், கம்பீரம் குறையாத சிங்கம்.
— ஜியோ ஹாட்ஸ்டாரில் கண்டு ரசிக்க வேண்டிய இணையத் தொடர் இது.
(பின்குறிப்பு: 18 வயதுக்கு உட்பட்டோர் தவிர்க்க வேண்டிய தொடர் இது)