சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தில் சீமான்

முழு நேர அரசியல்வாதி ஆகிவிட்டபோதிலும் விரும்பி கேட்டு வரும் சினிமா வாய்ப்பை ஒரு போதும் புறக்கணித்ததில்லை சீமான். கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் சேயோன் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க படக்குழு அவரை அணுகிய போது உடனே ஓகே சொல்லி இருக்கிறார்.

தற்போது மதுரையில் நடைபெற்று வரும் ‘சேயோன்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தும் வருகிறார்.

தாய்க்கிழவி வெற்றிப் படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இந்தப் படத்தை இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். அன்பரிவ் சண்டைப் பயிற்சி அளிக்கின்றனர்.
கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து உருவாக்கி வரும் படம் இது.