‘‘காலம் மாறி விடடது…முத்தக்காட்சியை இப்போது திரையில் நேரடியாகவே காட்டலாம்……’’
‘ஹை நான்னா’ பட விழாவில் பற்றி நடிகர் நானி ‘பளிச்’
நானி மற்றும் மிர்ணாள் தாக்கூர் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹை நான்னா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் டிசம்பர் 7 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதையொட்டி நடிகர் நானி, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து படம் பற்றிய பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசுகையில், , “’நான்னா’ என்றால் தமிழில் அப்பா, ஆனால் படத்தின் பெயர் எல்லா மொழியிலும் ஒரே மாதிரி இருக்கட்டும் என்று நினைத்தோம்,. இது ஒரு அழகான படம். படத்தை முழுதாகப் பார்த்த பிறகு சொல்கிறேன், இந்தப்படம் எனக்கு பெருமை தரும் படம். டிசம்பர் 7 திரையரங்குகள் கொண்டாடும் படமாக இது இருக்கும்.
ஒரு காதல் படம், ஆனால் பரபரவென போகும் கதை என கண்டிப்பாக உங்கள் மனதில் இடம் பிடிக்கும்.. இது ஒரு முறை பார்க்கும் படமாக இருக்காது, மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கும் படைப்பாக இருக்கும்.
அம்மா சென்டிமென்ட் படங்கள் எல்லாம் நிறைய வந்துவிட்டன, இப்போது அப்பா சென்டிமென்ட் படங்கள் வர ஆரம்பித்துள்ளன. அது நல்லது என்றே நினைக்கிறேன். எனக்கு தமிழ்ப் படங்கள் ரொம்பப் பிடிக்கும். மணிரத்னம் சார், கமல் சார் படங்களின் தீவிர ரசிகன் நான். ஆனால் தமிழ் முழுமையாக பேச வராது, இப்போது கற்றுக் கொண்டிருக்கிறேன். விரைவில் பேச முடியும் என நம்புகிறேன்.
‘பாகுபலி’, ‘காந்தாரா’ போன்ற படங்கள் வந்த பிறகு தமிழ் நடிகர், தெலுங்கு நடிகர் என்று பிரித்து பார்த்து படம் எடுக்கத் தேவையில்லை, சொல்லும் கதைக்கு உண்மையாக இருந்தால் போதும், அது மக்களிடம் போய்ச் சேரும் எனப் புரிந்தது. என் எல்லாப் படங்களும் இனி தமிழில் வரும்.
நடிகை மிருணாள் இந்தப் பாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று மொத்த டீமும் நினைத்து தான் தேர்வு செய்தோம், அதை அவர் அற்புதமாக செய்துள்ளார்.
காதலை உணர்வுப்பூர்வமாக சொன்னால் அதை விட பெரிய ஆக்ஷன் திரில்லர் எல்லாம் கிடையாது. அதை இந்தப்படம் பார்க்கும் போது உணர்வீர்கள்.
முன்பெல்லாம் முத்தக் காட்சியில் திரை இருட்டாகி விடும், 2023ல் கிஸ் பெரிய விசயம் இல்லை. இங்கு கல்யாணம் ஆனவர்கள் இருப்பீர்கள், மனைவியை முத்தம் கொடுக்காமல் யாராவது இருப்பார்களா? முன்னர் மாதிரி மரத்தை சுற்றுவது, பூவைக் காட்டுவது என்று இப்போதைய ஆடியன்ஸை ஏமாற்ற முடியாது, முத்தத்தை திரையில் காட்டலாம் தவறில்லை. ஆண் பெண் உறவை மிகச்சிறப்பாக பேசும் படமாக இது இருக்கும், உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் சிறப்பான படைப்பாக இருக்கும்.” என்றார்.
வைரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஷெளர்யுவ் இயக்கியுள்ளார். சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்ய, ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.படத் தொகுப்பு பிரவீன் அந்தோணி.
