மெரி கிறிஸ்துமஸ் திரை விமர்சனம்

துபாயில் வேலையில் இருக்கும் விஜய் சேதுபதி, பல வருடங்களுக்குப் பிறகு மும்பையில் உள்ள தனது வீட்டுக்கு வருகிறார். விடிந்தால் கிறிஸ்துமஸ். ஊரெங்கும் அதன் கொண்டாட்டம் ஒளி விளக்குகளை அலங்கரித்துக் கொண்டிருக்கஅந்த இரவில் ஒரு ஒட்டலுக்கு செல்லும் விஜய்சேதுபதியின் பார்வையில் படுகிறார், கத்ரினா கைப்.,கூடவே அவர் மகளும்.

அதுவரை அறிமுகம் இல்லாத இருவரும், தங்களது வாழ்க்கை பற்றி பேசும் போது, கத்ரினா கைப் தனது கணவருடன் கருத்து வேறுபாட்டோடு வாழ்வதை சொல்ல, விஜய் சேதுபதி தனது காதலியின் பிரிவை பற்றி சொல்கிறார்.

மனம் விட்டுப் பேசிய நிலையில் வீட்டுக்கு வரும் கத்ரினா கைப்புக்கு அதிர்ச்சி காத்திருக்கிறழது. அவரது கணவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்த நிலையில் இருக்க, அதன் பிறகு நடக்கும் அதிரடி சம்பவங்களை எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்வதே இந்த ‘மெரி கிறிஸ்துமஸ்’.

வழக்கமான பாணியிலான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இல்லாமல் கிளாசிக் பாணியில் கதையும், காட்சிகளும் நகர்வது சுவையான திரை அனுபவம்.,

கத்ரினா கைப் கேரக்டர் எதிர்பார்க்க வைக்கிறது. அதில் அவரது இயல்பான நடிப்பும் இணைந்து கொள்ள அவர் தேரக்டர் மீதான சுவாரசியம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

ஆல்பர்ட் ஆரோக்கியசாமி என்ற கேரக்டரில் விஜய் சேதுபதி, வழக்கம் போல் தனது இயல்பான நடிப்பு மூலம் நம்மை ஆக்ரமித்து விடுகிறார். கிளைமாக்சில் அவர் எடுக்கும் முடிவும், அந்த நடிப்பும் ஆஹா ரகம்..

கவின் பாபு, ராதிகா சரத்குமார், சண்முகராஜா, ராதிகா ஆப்தே, ராஜேஷ், பொருத்தமான பாத்திரத் தேர்வுகளில் பளபளக்கிறார்கள்..

மது நீலகண்டனின் ஒளிப்பதிவு கண்ணில் ஒற்றிக்கொள்ளும் ரகம். .

ப்ரீத்தம் இசையில் பாடல்களும் டேனியல் பி.ஜார்ஜின் பின்னணி இசையும் படத்திற்கு பலம்.
ஒருவருடைய மர்ம மரணம், அதை சுற்றி நடக்கும் சம்பவங்கள் தான் காட்சிகள் என்றாலும்அதை அழகுற காட்சிப்படுத்திய விதத்தில் . ஸ்ரீராம் ராகவன் தமிழ் சினிமாவுக்கும் நல்வரவு.