ஓப்பன் கேட் பிக்சர்ஸ் சார்பில் அன்பு, வினோத், அரவிந்த் தயாரித்துள்ள படம், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கம் . யோகி பாபு, இனியா, . மாரிமுத்து, மொட்டை ராஜேந்திரன், பால சரவணன், மகேஷ், சென்றாயன், நமோ நாராயணன், அஷ்வின் பிரதான நட்சத்திரங்கள்.
பரம்பரை பரம்பரையாக பாதுகாத்து வந்த ஒரு கிரீடம் காணாமல் போக ,அதை லவட்டிட்டுப் போனது யாருங்கிறது படத்தோட ஒன்லைன். இயக்குநர் மஞ்சு நாத் பரபரன்னு படம் ஓடும்கிற நம்பிக்கையில் திரைக்கதை அமைத்திருக்கிறார். யோகிபாபு ,இனியா ரெண்டு பேரும் கடனை கழித்த மாதிரி வந்து போயிருக்கிறார்கள்.
மன்னர் வம்சத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. முன்னோர் ஒருவர், தன் தலையை துண்டித்து, ஊர் சாமிக்கு கொடுத்ததினால் தலையை துண்டித்து கொண்ட, மன்னனின் கிரீடத்தினை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். ஒரு நாள் கிரீடம் காணாமல் போக, குழப்பம் .. டிவிஸ்ட் வைக்கனுமே ன்னு யோகிபாபுவை ஆவியாக மாற்றி மக்களை கொடுமைப் படுத்துகிறார்கள். நம்மையும் தான்.
அஜித் நடித்த ஒரு படத்தில் அவர் கேரக்டர் பெயர் தூக்கு துரை. அந்த பெயரில் ஒரு படம் தந்து தியேட்டருக்குள்ளேயே ‘கொர்.. கொர்.. ’வரவழைத்த விதத்தில் இவன் ‘தூக்க’த்துரை.
