சிங்கப்பூர் சலூன் திரை விமர்சனம்

‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படம் மூலம் வெற்றி கண்ட கோகுல், ‘ஜூங்கா’வில் சறுக்கினார். சிங்கப்பூர் சலூன் இவரது அடுத்த சறக்கல். .

டத்தின் ஒரே ஒரு பாசிட்டிவ் விஷயம் சத்யராஜ். முழுக்க வித்தியாசமான கதாபாத்திரத்தில் மனிதர் அசத்துகிறார்.

.ஆர் ஜே பாலாஜிக்கு படம் முழுக்க சீரியஸ் ரோல். ஆனால் அந்த எமோஷன்களை இன்னும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கலாம்.

நாயகி மீனாட்சி சௌத்ரி. நடிப்புக்கும் அவருக்கும் நாலு மைல் தூரம் என்பதை வரும் காட்சிகளில் எல்லாம் நிரூபிக்கிறார்.. லோகேஷ் கனகராஜ், ஜீவா இருவருக்கும் கெஸ்ட் ரோல். ஆனால் வேஸ்ட் ரோல். அரவிந்த் சுவாமி இன்ப அதிர்ச்சி. நடிப்பும்.

வண்டு தான் பூவ தேடி போகணும், பூ வண்ட தேடி போகக் கூடாது’ போன்ற வசனங்கள் வரும் போது, ‘டைரக்டர் சார் எந்த காலத்தில் இருக்கிறீர்கள்?’என்று கேட்கத் தோன்றுகிறது.

இந்தப் படத்தின் முதன்மை பிரச்சினையே கதை சரியாக எழுதப்படாதது தான்.

சலூனைக் காப்பாற்ற நடக்கும் சோஷியல் மீடியா போராட்டம் என கன்னா பின்னாவென கதையை சுற்றி வளைத்ததில் கூட பிரச்சினையில்லை. அனால் அதை செயற்கையாக சொல்லி கடுப்பேற்றியதில் தான்  சோதனை.