விமல், மிர்ச்சி சிவா நடிப்பில் ‘கலகலப்பு-3‘

சுந்தர்.சி இயக்கத்தில் 2012-ம் ஆண்டு வெளியான படம் ‘கலகலப்பு’. இதில், விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், மனோபாலா, ஓவியா, அஞ்சலி பிரதான நட்சத்திரங்கள். பெரும் வெற்றிபெற்ற இந்தப் படத்தின் நகைச்சுவை காட்சிகள் இப்போது வரை ரசிர்களின் பேவரைட்.

கடந்த 2018-ம் ஆண்டு, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. ஜீவா, ஜெய் நடித்திருந்தனர். இது வெற்றி பெற்றபோதிலும் முதல்பாகம்அளவுக்கு இல்லையே என்பது ரசிகர்களின் குரலாக இருந்தது.. விரைவில் ‘கலகலப்பு’ மூன்றாம் பாகம் வெளியாகும்என்று கூறப்பட்டு வந்தது.

தற்போது சுந்தர்.சி. இயக்கிய ‘அரண்மனை 4’ வெளியாகி சக்கை போடு போடும் நிலையில்
‘கலகலப்பு’படத்தின் 3-ம் பாகத்துக்கும் வாசல் திறந்திருக்கிறது. முதல் பாகத்தில் நடித்த விமல், மிர்ச்சி சிவா நடிக்க இருக்கின்றனர். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. சுந்தர்.சி.க்கு அடுத்த வெற்றிப் படம் ரெடி.