சசிகுமார், சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் கருடன் படம் வரும் மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிமாறன் எழுதிய இந்த கதையை இயக்கி இருப்பவர் துரை. செந்தில்குமார். இவர் ‘எதிர் நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, ‘கொடி’, ‘பட்டாசு’ படங்களை இயக்கியவர், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி படத்தின் ஏனைய பிரதான நட்சத்திரங்கள். படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா.