இந்திய சினிமாவில் தடம் பதித்து வரும் இளம் நடிகர்

சினிமாவிற்கு மொழி என்பது கிடையாது. அதற்கும் அப்பாற்பட்டது தான் சினிமா என்பதை நிருபித்து வருபவர் “ஜேசன் ஷா”ஆவார்.

வெளிநாட்டில் பிறந்து இந்தியாவில் வளர்ந்து வந்தவர் அமெரிக்கா நியூ யார்க் பிலிம் அகாடெமியில் நடிப்பிற்காக பட்டம் பெற்றுள்ளார். தனது நடிப்புத் பயணத்தை ஹிந்தியில் சின்னத்திரை நாடகங்களில் தொடங்கினார். சில நாடகங்களில் முதன்மை வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார் அதனைத் தொடர்ந்து ஹிந்தி திரைப்படங்களிலும்,தமிழ் திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தமிழில் 1947 ஆகஸ்ட் 16,கான்ஜுரிங் கண்ணப்பன், மிஷன் சேப்டர் 1,ஆகிய திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து ஹிந்தி திரையுலகில் சில வெப் சீரிஸ் தொடர்களிலும் நடித்துள்ளார் அதில் குறிப்பிடத்தக்க ஒன்று புகழ் பெற்ற இயக்குனர் “சஜ்சய் லீலா பன்சாலி”இயக்கத்தில் வெளியான “ஹீரமண்டி” வெப் தொடரில் நடித்துள்ளார்.

சமீபத்தில் அலியா பட் நாயகியாக நடித்து முடித்துள்ள ஜிகிரா திரைப்படத்திலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி மொழிகளில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதே ஜேசன் ஷாவின் லட்சியமாம்.