நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ராகுல் சதாசிவம் இயக்கத்தில் உருவான ‘பிரமயுகம்’ (மலையாளம்- 2024) திரைப்படம் லாஸ் ஏஞ்சல்ஸின் அகாடெமி மியூசியத்தில் திரையிடப்பட உள்ளது.
இந்தப் படத்தின் திரையிடல் பிப்ரவரி 12, 2026 அன்று அகாடமி அருங்காட்சியகத்தில் ஜனவரி 10 – பிப்ரவரி 12 வரையிலும் நடைபெறும் நிகழ்வில் திரையிடப்படும்.
ராகுல் சதாசிவன் எழுதி இயக்கிய ‘பிரமயுகம்’ திரைப்படம் கேரள நாட்டுப்புறக் கதைகளின் இருண்ட காலங்களின் பயம், சக்தி மற்றும் மனித பலவீனம் பற்றிய கதையாகும். கருப்பு & வெள்ளையில் (Black & White) வெளியான இந்தத் திரைப்படம் அதன் ஆளுமைத்திறன், கதைசொல்லல் ஆகியவற்றிற்காகப் பாராட்டப்பட்டது.
‘பிரமயுகம்’ திரைப்படத்தில் கொடுமோன் போட்டி கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார் நடிகர் மம்முட்டி. அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் மற்றும் அமல்டா லிஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் ஷெஹ்னாத் ஜலால் (ISC) ஒளிப்பதிவு, கிறிஸ்டோ சேவியர் இசை, ஜோதிஷ் சங்கர் தயாரிப்பு வடிவமைப்பு, ஷஃபிக் முகமது அலி படத்தொகுப்பு, ஜெயதேவன் சக்கடத் ஒலி வடிவமைப்பு, எம்.ஆர். ராஜகிருஷ்ணன் ஒலி கலவை, டி.டி. ராமகிருஷ்ணன் வசனம், ரோனெக்ஸ் சேவியர் மற்றும் ஜார்ஜ் எஸ். ஒப்பனை, பிரீத்திஷீல் சிங் டி’சோசா புரோஸ்தெடிக்ஸ் மற்றும் மெல்வி ஜெ ஆடை வடிவமைப்பையும் கவனித்துக் கொண்டனர்.
ராகுல் சதாசிவன் எழுதி இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் உருவான மலையாள திரைப்படம் ‘பிரமயுகம்’. ஹாரர்- த்ரில்லர் படங்களை தயாரிப்பதற்காகவே பிரத்யேகமாக தொடங்கப்பட்ட நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் பேனரின் முதல் தயாரிப்பு இந்தப் படம். நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் இந்தத் திரைப்படத்தை வழங்கியது.
‘பிரமயுகம்’ படத்தின் இயக்குநர் மற்றும் அதே அணியினரோடு நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் தனது இரண்டாவது படமாக தயாரித்தது பிரணவ் மோகன்லால் நடிப்பில் அக்டோபர் 31, 2025 அன்று வெளியான ‘டைஸ் ஐரே’ படம்.
