மீண்டும் இணையும் ஆதித்யா பாஸ்கர் – கெளரி கிஷன் ஜோடி

‘96’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஆதித்யா பாஸ்கர். அதில் கெளரி கிஷனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படத்துக்குப் பிறகு தற்போது இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடித்து வருகிறார்கள்.

அறிமுக இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத இப்படத்தில் ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன், சரஸ்வதி மேனன், கே. பாக்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, டிஎஸ்ஆர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஆர்ஜின் ஸ்டூடியோஸ் நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது. படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், படம் குறித்து இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி கூறுகையில் , “உண்மை சம்பவத்தை தழுவி தற்போதைய தலைமுறையினர் ரசிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இதில் ’96’ படத்திற்கு பிறகு மீண்டும் ஆதித்யா பாஸ்கர்- கௌரி கிஷன் ஜோடி நடிக்கிறார்கள்.’ என்கிறார்.