KRG Kannan Ravi Group தயாரிப்பில் தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி வரும் தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி, தற்போது தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய தயாரிப்பாளர்களாக உயர்ந்து வருகின்றனர். தரமான கதைகள், வித்தியாசமான கதாபாத்திரங்கள், மற்றும் சிறப்பான வணிக அம்சங்கள் கலந்த படங்களைத் தேர்வு செய்வதில் இவர்களின் நேர்த்தியான திறன் இவர்களை மற்ற தயாரிப்பாளர்களிடமிருந்து தனித்துவப்படுத்துகிறது.
இவர்களின் தயாரிப்பில், இயக்குநர் உமாபதி ராமையா இயக்கத்தில், நடிகர் நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்துள்ள “TN 2026” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசியல் நகைச்சுவை கலந்த கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம், சமூக கருத்துகளையும், அரசியல் பகடியையும், சிரிப்பூட்டும் நிகழ்வுகளாக இணைத்து மக்களிடம் எளிதாக சேர்கிறது.
படம் வெளியான பிறகு, தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் சொந்த ஊரான திட்டக்குடியில் நடைபெற்ற கொண்டாட்டம் வெகு சிறப்பாக அமைந்தது. படக்குழுவினர் இயக்குநர் உமாபதி ராமையா, நட்டி, சிருத்தா ராவ், தம்பி ராமையா, இளவரசு ஆகியோர் நேரில் திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்து மகிழ்ந்தனர். அப்போது பொதுமக்கள் காட்டிய அன்பு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது — மேளதாளம், பேண்டு வாத்தியம், சரவெடி, ஊர்வலம் என படக்குழுவை உற்சாகத்தில் ஆழ்த்தினர். தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் மீதான அந்த பாசம், அவரின் மக்கள் தொடர்பையும் நிலையான ஆதரவையும் வெளிப்படுத்தியது.
“TN 2026” திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. வெளியீட்டிற்கு முன்பே அதன் போஸ்டர் மற்றும் விளம்பரங்கள் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றன. அரசியல் பகடி, நகைச்சுவை, மற்றும் சமூக கருத்துக்களை இணைக்கும் இப்படம், மக்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.
“தலைவர் தம்பி தலைமையில்” எனும் ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படத்தைத் தொடர்ந்து, “TN 2026” மூலம் கண்ணன் ரவி – தீபக் ரவி கூட்டணி மீண்டும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மேலும், அடுத்ததாக நடிகர் ஜெய் நடிப்பில், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் “டெக்ஸ்லா” திரைப்படத்தையும் அவர்கள் தயாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில், கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய தயாரிப்பாளர்களாக மாறி வருகின்றனர்.