கொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் சூர்யாவின் 48-வது படம்-த.செ.ஞானவேல் இயக்குகிறார்

நடிகர் சூர்யா நடிப்பில், ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவத்தின் பிரமாண்ட தயாரிப்பில் புதிய படம் தயாராகிறது. இது நடிகர் சூர்யாவின்
48-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது,
‘ஜெய்பீம்’ வெற்றி படத்தை இயக்கிய த.செ. ஞானவேல் இந்த படத்தை இயக்குகிறார்.
ஜெய் பீம் வெற்றிப் படம் மூலம்
எல்லா தரப்பு சினிமா ரசிகர்களின் கவனத்தையும் பெற்று ஆச்சர்யப்பட வைத்த இவர்கள் மீண்டும் இணையும் திரைப்படத்தை, கே.ஜி.எஃப், காந்தாரா, சலார் போன்ற பிளாக் பஸ்டர் ஹிட் வெற்றி படங்களைத் தருவதில் புதிய சாதனைகளைப் படைத்து வரும், இந்தியாவின் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பது
இந்திய அளவில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

வெற்றித்திரைப்படங்களின் முகவரியாக விளங்கும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனர் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் இத்திரைப்படம் பற்றி கூறும்போது, ’’இந்திய சினிமாவின் சிறந்த நட்சத்திர நடிகராக விளங்கும் சூர்யாவை, முப்பது ஆண்டுகளுக்கு மேல் மக்கள் கொண்டாடி வருகின்றனர். வணிக வெற்றியையும், விமர் சகர்களின் பாராட்டையும் ஒருசேர பெறுவதில் தனித்து விளங்கும் சூர்யா அவர்களுடன் ஹொம்பாலே பிலிம்ஸ் இணைவதில் பெருமிதமும் பெருமகிழ்ச்சியும் அடைகிறது.

இந்தியா கடந்து உலக அளவில் கவனம் ஈர்த்த ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய த.செ. ஞானவேல், அழுத்தமான கதைக் களத்தில் நட்சத்திர நடிகர்களை வெற்றிகரமாக கையாண்டு வெற்றிகளைத் தரக்கூடியவர். மொழி மற்றும் கலாசார எல்லைகளை கடந்து செல்லும் சிறந்த வெற்றிப் படங்களை உருவாக்குவதில் ஹொம்பாலே பிலிம்ஸ் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இந்திய அளவில் பெரும் வெற்றியையும், கவனத்தையும் பெறப்போகும் திரைப்படத்தை தயாரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
ஹொம்பாலே பிலிம்ஸ் மக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு சிறந்த படங்களை தயாரிப்பதிலும், அதை மிகப்பெரிய அளவில் பிரம்மாண்ட வெற்றியடையச் செய்வதிலும் ஆர்வமும் கவனமும் செலுத்துகிறது. இந்த தொலைநோக்கு சிந்தனையோடு உள்ள நடிகர்களையும், இயக்குனர்களையும், தொழில் நுட்ப கலைஞர்களையும் இணைப்பதில் எப்போதும் தீவிரம் காட்டி வருகிறது” என்கிறார்.
படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என எல்லா மொழிகளிலும் மிகவும் கவனம் ஈர்த்த கயாடு லோகர் கதாநாயகியாக நடிக்கிறார். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ், யோகிபாபு, குமரவேல் முக்கிய கேரக்டர்களில் இருக்கிறார்கள்.
எஸ். ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்ய, கே. கதிர் தயாரிப்பு வடிவமைப்பிலும், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பிலும்,
பா.கிருத்திகா திரைக்கதையிலும் பங்களிப்பு செய்கிறார்கள்.

இத்திரைப்படத்தின் இதர தொழில் நுட்ப கலைஞர்கள் விவரங்கள் விரைவில் வெளியாக
உள்ளன. ஜூலை மாதம் 22-ம் தேதி முதல் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.