ஐ நோபடி –திரை விமர்சனம்

ரேட்டிங்: 8/10.

வங்கி ஒன்றில் கொள்ளையடிக்கும் மூவர் கூட்டணி, அங்கிருந்து தப்பி செல்லும்போது அந்த வங்கியில் இருக்கும் பிரித்விராஜ் சுகுமாரனின் முகத்தை மூடி பிணைக் கைதியாக கடத்தி செல்கிறார்கள்.
ஒரு இடத்தில் அவரை இறக்கி விடும்போது, கொள்ளையர் மூவரில் ஒருவரது ஆதாரம் பிரித்விராஜ் கையில் கிடைக்க…
ஆனால் சோதனையாக அந்த கொள்ளையர்கள் போன கார் விபத்தில் சிக்கி மூன்று பேரும் உயிரிழக்கிறார்கள்.

பிரித்விராஜிக்கு கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் திருடர்கள் யார் ? என்பதை கண்டுபிடிக்கும் போலீஸ், அவர்கள் இறந்து விட்டதால், அவர்கள் கொள்ளையடித்த பணத்தை கைப்பற்ற தேடுதல் வேட்டையை தொடர்கிறது

இதே வேளையில் போலீசின் சந்தேகப் பார்வை பிரித்விராஜ் மீதும் திரும்புகிறது. அந்த வங்கியில் அவருக்கோ அவரது குடும்ப உறுப்பினர்களுக்கோ கணக்கு உள்ளிட்ட எந்தவித தொடர்பும் இல்லாத தலையில் அந்த வங்கிக்கு அதுவும் அந்த நேரம் அவர் ஏன் சென்றார்? வங்கி ஊழியர்களிடம் எந்தவித உதவியும் கேட்காமல் நெடுநேரமாக அங்கு இருந்தது ஏன் ? என்ற கேள்வி எழ…
பிரித்விராஜுக்கும் அந்த கொள்ளையில் சம்பந்தம் இருக்கலாம் என்று போலீஸ் சந்தேகிக்கிறது.
இந்த சந்தேகம் வங்கி கொள்ளைக்கு திட்டம் வகுத்து கொடுத்த
வரே இவர் தானோ என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை தொடங்க…
இதனால் பிரித்விராஜுக்கு மட்டும் இன்றி அவரது குடும்பத்தாருக்கும் பல சிக்கல்கள் ஏற்பட…

சிக்கல்களில் இருந்து மீள்வதற்கு போராடும் பிரித்விராஜின் செயல்கள் ஒவ்வொன்றும் புதிய சிக்கல்களை உருவாக்கி, தப்பிக்க முடியாத அளவுக்கு அவரையே அதில் சிக்க வைக்க, அதில் இருந்து அவரும், அவரது குடும்பத்தாரும் எப்படி மீண்டார்கள் ?, சம்பந்தமே இல்லாத அந்த வங்கிக்கு பிரித்விராஜ் சென்றது ஏன் ?, கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்கே போனது? இத்தனை கேள்விகளுக்கும் பரபரப்பை உச்சத்தில் வைத்து விடை சொல்லி இருக்கிறார்கள்.

வங்கி கொள்ளை சம்பவம் தான் கதையின் மையக்கரு. ஆனால், கொள்ளையடித்தவர் களை தவிர்த்து விட்டு, அதற்கு சம்பந்தமே இல்லாத ஒரு கதாபாத்திரத்தை வைத்துக் கொண்டு, திருப்பமும் திகிலுமாய் சொன்ன விதத்தில் இந்த நோபடி எல்லாருக்குமான எவ்ரிபடி ஆகி விடு கிறது.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் பிரித்விராஜ் சுகுமாரன், ஆரம்பக் காட்சியில் துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழையும் போதே விறுவிறு திரைக் கதையையும் படத்துக்குள் கொண்டு வந்து விடுகிறார், இயக்குனர்.
தன் இளைய மகளிடம் மட்டுமே பேசிக்கொண்டு தனது வாழ்க்கை சம்பவங்களை கதையாக விவரிப்பதும், தனக்கு எதிரான சிக்கல்களில் இருந்து விடுபட சாமானியனாக போராடுவதுமாய் நடிப்பில் வாழ்ந்திருக்கிறார், பிரித்வி ராஜ் . அவரது
மனைவியாக நடித்திருக்கும்
பார்வதியை
அவருக்கே உரிய இயல்பான நடிப்பு தூக்கி நிறுத்தி விடுகிறது.
காவலர் கேரக்டரில் வரும்
ஹக்கீம், ஜேக்கப் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அசோகன், முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜயராகவன், டி.எஸ்.பி.யாக நடித்திருக்கும் சங்கர் ராமகிருஷ்ணன், வங்கி கொள்ளை வழக்கை விசாரிக்கும் குற்றப்பிரிவு அதிகாரியாக நடித்திருக்கும் மதுபால், பிரித்விராஜின் மூத்த மகளாக நடித்திருக்கும் ஜியா மற்றும் இளைய மகளாக நடித்திருக்கும் சிறுமி பொருத்தமான பாத்திரத் தேர்வுகள்.

படத்தில் மாயாஜாலம் புரிந்திருக்கிறது ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் கேமரா. பேருந்தில் நடக்கும் சண்டைக்காட்சி, மின் தூக்கியில் நடக்கும் சண்டைக்காட்சி, ஒரு அறைக்குள் நடக்கும் சண்டைக்காட்சி, சாலை விபத்து என அத்தனையும் இவரது கேமராவில் துல்லியம்.
இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை இறக்கை கட்டி பறக்கும் காட்சிகளின் வேகத்திற்கு பெரும் பலமாகி விடுகிறது.
எழுத்தாளர் சமீர் அப்துல் எழுதிய கதைக்கு திரை வடிவம் கொடுத்து இருக்கியிருக்கிறார், நிசாம் பஷீர்.
வங்கி கொள்ளை என்ற மிகப்பெரிய குற்ற சம்பவத்தை வைத்துக்கொண்டு, அதற்கு சம்பந்தமே இல்லாத ஒரு சாமா னியனின் வாழ்க்கை போராட்டத்தை திகிலும் திரில்லருமாய் தந்திருக்கிறார். கிளைமாக்ஸ் வரை நீடிக்கும் அந்த சஸ்பென்சுக்கு நிச்சயம் ஒரு ஜே போடலாம்.

பிளஸ்: நம்பகத்தன்மை மிக்க திரைக்கதை.

பிளாஷ்: மிரட்டும் சண்டைக் காட்சிகள்.