சூர்யா-ஜீத்து மாதவன் இணையும் புதிய படம்

சூர்யா நடிப்பில் ‘கருப்பு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ஆகஸ்ட் 14-ம் தேதி ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ வெளியாகவுள்ளது. இந்த படத்தை வெங்கட் அட்லூரி இயக்கியுள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து ஜீத்து மாதவன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இதனை தனது ழகரம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் சூர்யாவே தயாரித்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்துக்கு ‘சீனு’ என்ற தலைப்பு பரிசீல பரிசீலனையில் இருந்து வருகிறது .

படத்தில் காவல்துறை அதிகாரியாக சூர்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நஸ்ரியா, நஸ்லின் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ள இப்படத்தினை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு தீர்மானித்துள்ளது.