நடிகர் அஜித் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘டேர் டெவில்.’

‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்துடன் மீண்டும் இணைந்துள்ளார்.

அஜித்தின் மனைவி ஷாலினி படத்தை தயாரிக்க, தய அனிருத் இசைய மைக்கிறார்.

மற்ற நடிகர் நடிகைகள் பட்டியலை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.

படம் குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தடைகளை உடைத்து, லட்சக்கணக்கானோரை ஊக்குவித்து, நட்சத்திர அந்தஸ்துக்கான இலக்கணத்தை மாற்றியமைத்த 34 ஆண்டு கால பயணம்.

விருப்பம், விடாமுயற்சி, ஈடு இல்லாத வசீகரத்தால் கட்டமைக்கப்பட்டது இந்தப் பயணம். ‘டேர் டேவில்’ இங்கே இருக்கிறது. இது சிறப்பு வாய்ந்ததாக இருக்கப் போகிறது. என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி அஜித் சார்… நன்றி தயாரிப்பாளர் ஷாலினி மேடம், அனிருத் சார்’ என்று தெரிவித்துள்ளார்.