கிட்டி-திரை விமர்சனம்

அதிரடியான ஒரு திருப்பத்துடன் கதை தொடங்குகிறது, ரத்தக் கறையுடன் போலீஸ் ஸ்டேஷன் வரும் விஜய் (அசோக்) அங்கு பணியில் இருக்கும் காவல் அதிகாரி யுகனிடம் தான் இரண்டு கொலைகளைச் செய்துவிட்டதாக சொல்லி சரணடைகிறார்.

தான் தீவிரமாகக் காதலித்த பூஜாவையும் (நிஷா), அவளைக் கொல்வதற்காக அவளது கோடீஸ்வரத் தந்தை ஏவி விட்ட கூலிப்படை ஆளையும் தானே
கொன்று
விட்டதாக வாக்குமூலமும் தருகிறார்.
குற்றத்தை மிக எளிதாக ஒப்புக் கொண்டாலும், போலீஸ் அதிகாரி யுகனுக்கு விஜய்
சொல்லும் வாக்குமூலத்தில் பல முரண்பாடுகள் காணப்படுவது தெரிய வர…

விசாரணையை தீவிரப் படுத்திய போது, விஜய் ஒரு சாதாரண மனிதன் அல்ல என்பதும், அவருக்கு ஒரு விசித்திரமான
மன நல குறைபாடு இருப்பதும் தெரிய வருகிறது.

‘யாராவது ஒரு சம்பவத்தை நீதான் செய்தாய் என்று தொடர்ந்து கூறினால், அதைத் தானே செய்ததாக நம்பத் தொடங்கி விடுவார். இந்த குறைபாடு இன்ஸ்பெக்டர் குகனுக்கு தெரிய வந்ததும், விஜய் காதலித்ததாகச் சொல்லும் பூஜா உண்மையில் யார்? பூஜாவுக்கும்
விஜய்க்கும் இடையே நடந்தது என்ன என்ற கோணத்தில் விசாரணையை
முடுக்கி
விடுகிறார்.
இந்த விசாரணை
மேலும் இரண்டு பெண்கள் மேல் திரும்புகிறது.
விஜய் கூறிய கொலைகள் உண்மையில் நடந்ததா? அல்லது வேறு யாரையோ காப்பாற்ற அவர் நாடகமாடுகிறாரா? இதன் பின்னணியில் அதிகார வர்க்கத்துக்கு சம்பந்தம் உண்டா என்பது சஸ்பென்சுடன் கூடிய திரில்லர் திரைக்கதை.

விஜய் கேரக்டரில் வரும் அசோக், போலீஸ் ஸ்டேஷனில்
அமைதியாகச் சரணடையும் முதல் காட்சியிலேயே பார்வையாளர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி விடுகிறார்.
காதல் காட்சிகளில் இளமை துடிப்புடன் வளைய வருபவர், குற்ற உணர்ச்சி மேலிடும் தருணங்க ளில் இன்னொரு மனிதராக மாறித் தெரிகிறார்.
இவரது காதலியாக வரும் சங்கவி காதல் காட்சிகளில் அழகு கூடித்தெரிகிறார்.

கதையின் அடுத்த கட்ட நகர்வுக்கு மிக முக்கியக் காரணமாக இருக்கும் பூஜா, சிமு அத்வானி இருவருமே தங்கள் கதாபாத்திரங்களில்
இயல்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள் .

விசாரணை அதிகாரியாக வரும் யுகன், ஒரு நிஜமான போலீஸ்
அதிகாரியை கண் முன் நிறுத்துகிறார். போதிய உடற் கட்டும் அதற்கு துணை புரிகிறது.
அசோக்கை இவர் விசாரிக்கும்
பாணிக்கு ஒரு ராயல் சல்யூட் வைக்கலாம்.

நீதிபதியாக வரும்
ஓய்.ஜி.மகேந்திரன்
நீதிமன்றக் காட்சிகளில் அனுபவமிக்க நடிப்பை வழங்கி, இருக்கிறார். கதையின் போக்கையே மாற்றி அமைக்கிற டாக்டராக அரவிந்த் ராஜ் அம்சம்.
வெங்கடாசலம் சிங்காரவேலனின் கேமரா
த்ரில்லர் படத்திற்குத் தேவையான காட்சிகளை திகில் குறையாமல் தந்திருக்கிறது. ஷேக் காதரின் பின்னணி இசை அதற்கு பெரிதும் துணை நிற்கிறது.
நெடுமாறன் மோகன்தாஸ் இயக்கி இருக்கிறார். நாயகனின் மனநலம் சார்ந்த பின்னணியில் கொலை சம்பவங்களை துப்பறியும் திரைக்கதைக்குள் அடுத்தடுத்த திருப்பங்கள்
அமைத்து படத்தை எதிர்பார்ப்புக்குரிய தாக்கி விடுகிறார்.

சஸ்பென்ஸ் கதையை யூகிக்க முடியாத திருப்பங்களுடன் தந்து கதை சொன்னதற்காகவேஇந்த கிட்டியுடன் எளிதில் கிட்டிச் சேரலாம்.

Comments (0)
Add Comment