சின்னத்திரை டூ வெள்ளித்திரை என்கிற பயணத்தில் தங்களை அழகாக இணைத்துக்கொண்டு வெற்றிபெறும் நடிகைகள் வெகு சிலரே…
அந்தவகையில் அழகிய தமிழ் மகள் சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை ஷீலா ராஜ்குமார். பக்கத்து வீட்டு பெண் போன்ற அழகும் நடிப்பு திறமையும் அவரது கதாபாத்திரங்களில் பிரதிபலிக்க, தற்போது தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நாயகியாக மாறியுள்ளார் ஷீலா ராஜ்குமார்.
பல சர்வேதேச விருதுகளை பெற்ற டூ லெட், விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்ற மண்டேலா என நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரம் என்றால் ஷீலா ராஜ்குமாரை கூப்பிடுங்கள் என சொல்லும் அளவுக்கு யதார்த்த நடிப்பால் ரசிகர்களை மட்டுமல்ல, இயல்பான படைப்புகளை தர விரும்பும் படைப்பாளிகளையும் கவர்ந்துள்ளார் ஷீலா ராஜ்குமார். அதற்கேற்ற மாதிரி திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸிலும் தனது முத்திரையை பதிக்க துவங்கியுள்ளார் தனது அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ஷீலா ராஜ்குமார்.
இதுதவிர தமிழில் இன்னும் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன்.. அவற்றை பற்றிய தகவல்கள் விரைவில் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.
இன்னொரு பக்கம் மலையாளத்தில் ஏற்கனவே கும்பலாங்கி நைட்ஸ் என்கிற படத்தில் நடித்ததற்காக நிறைய பாராட்டுக்கள் கிடைத்தன. தற்போது மீண்டும் மலையாளத்தில் பெர்முடா என்கிற படத்தில் நடித்து வருகிறேன்.. ராஜீவ்குமார் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்…
மண்டேலா படத்தை தொடர்ந்து நல்ல கதைகளும் கதாபாத்திரங்களும் தேடி வருகின்றன. அந்தவகையில் ஒரு நல்ல படத்தில் நானும் முக்கிய பங்களிப்பை கொடுத்திருந்தது என் திரையுலக பயணத்தில் வெளிச்ச புள்ளியாக மாறியுள்ளது. பார்ப்பவர்கள் அனைவருமே மண்டேலாவுக்கு பிறகு உங்களது படங்களை பார்க்க ஆவலாக காத்திருக்கிறோம் என்று கூறுவதை கேட்பதற்கே பெருமையாக உள்ளது. அவர்களை போல நானும் ஆவலாகத்தான் இருக்கிறேன். கொரோனா இரண்டாவது அலை சமயத்தில் தயாரான படங்கள் விரைவில் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன” என்கிறார் ஷீலா ராஜ்குமார்.