அமீகோ கேரேஜ் திரை விமர்சனம்

அமைதியான குடும்பம், படிப்புக்கேற்ற வேலை, என்று வாழ்ந்து வரும் நாயகன் மாஸ்டர் மகேந்திரன், தான் எதிர்கொண்ட சிறு பிரச்சினையை கையாண்ட விதம் அவரை மிகப்பெரிய பிரச்சனையில் சிக்க வைக்கிறது. அதில் இருந்து மீள்வதற்காக அவர் எடுக்கும் ரிஸ்க்கான முடிவு அவரது வாழ்க்கையை எந்த மாதிரியான பாதிப்புக்குள்ளாக்குகிறது? அதில் இருந்து அவர் மீண்டாரா என்பதே இந்த விறுவிறு சுறுசுறு ‘அமீகோ கேரேஜ்’.நாயகனாக மாஸ்டர் மகேந்திரன், பள்ளிப்பருவம், கல்லூரி முடித்து பணிக்கு செல்லும் பருவம் என்று இரண்டு விதமான கெட்டப்களிலும் வித்தியாசம் காட்டுகிறார். காதல் காட்சியில் அப்பாவியாய் முகபாவனை காட்டுபவர் ஆக்ஷனில் எடுப்பது அதிடி ரணகளம்.

நாயகியாக நடித்திருக்கும் ஆதிரா வழக்கமான நாயகி வேலையை செய்து விட்டுப்போகிறார். கல்லூரி மாணவியாக வரும் ரம்யா, ரம்மியமான நல்வரவு.

அமீகோ கேரேஜின் உரிமையாளராக வரும் ஜி.எம்.சுந்தர், தனதுஅனுபவ நடிப்பில் கவனம் ஈர்க்கிறார்.
வில்லன்களாக வரும் தாசரதி, முரளிதரன் சந்திரன் நடிப்பில் மிரட்டி விடுகிறார்கள்.

விஜய்குமார் சோலைமுத்துவின் ஒளிப்பதிவும், பாலமுரளி பாலுவின் இசையும் படத்தின் பக்கபலம்.
வழக்கமான ஆக்ஷன் கதையை தனது திரைக்கதை மூலம் வித்தியாசமாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் பிரசாந்த் நாகராஜன், மேக்கிங்கில் பிரகாசிக்கிறார்.’கூடா நட்பு கேடாய் முடியும்’ என்ற கதையின் மைய முடிச்சை அழகாக கையாண்ட விதத்தில் இந்த கேரேஜ் வெயிட்டாகி விடுகிறது.

Comments (0)
Add Comment