கடைசிப்படத்தில் விஜய் சம்பளம் ரூ. 250 கோடி

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா,மீனாட்சி சவுத்ரி ஏனைய பிரதான நட்சத்திரங்கள்.. யுவன் சங்கர் ராஜா இசைஅமைக்கும் இந்தப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் இந்தப் படத்துக்காக விஜய், ரூ.200 கோடி சம்பளம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

அவர் அடுத்து நடிக்கும் படத்துடன் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார். அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் அவருடைய தமிழக வெற்றிக்கழகம் கட்சி தீவிரமாக களம் இறங்கப் போகிறது.

இதற்கிடையே அவர் கடைசியாக நடிக்கும் படத்தை ‘ஆர்ஆர்ஆர்’ படத் தயாரிப்பாளர் டிவிவி தனய்யா தயாரிக்கிறார் . இந்தப் படத்தை இயக்க ஹெச். வினோத், தெலுங்கு இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் உட்பட 3 இயக்குநர்கள் கதை சொன்னதாகவும் அதில் ஒரு கதையை விஜய் தேர்ந்தெடுப்பதிருப்பதாகவும் தகவல்கள் அலையடிக்கின்றன.இந்தப் படத்துக்காக விஜய்யின் சம்பளம் ரூ.250 கோடி என்கிறார்கள்.

Comments (0)
Add Comment