டபுள் டக்கர் திரை விமர்சனம்

முகத்தில் விபத்தில் ஏற்பட்டதழும்புடன் இருக்கும் பணக்கார அரவிந்துக்கு (தீரஜ்), பாரு (ஸ்மிருதி வெங்கட்) மீது காதல்.

தனது காதலை ஒரு நாள் சொல்ல, நாயகியோ அதை ஏற்கவில்லை. இதனால் நாயகன் தற்கொலைக்கு முயல, கடவுளின் உலகத்தில் இருந்து வரும் ரைட், லெஃப்ட் என்ற அனிமேஷன் கதாபாத்திரங்கள், ஆயுள் முடிந்து விட்டதாகக் கருதி தவறாக அவர் உயிரை எடுத்துவிட, அதேநேரம் அவர் சடலமும் மாயமாகிறது. அதனால், அரவிந்தின் உயிரை, அவரைப் போலவே இருக்கும் ராஜா என்பவரின் உடலுக்குள் அனுப்பி வைக்கின்றனர் ரைட்டும், லெஃப்ட்டும்.

தொலைந்த அரவிந்தின் உடல் கிடைத்ததா? அரவிந்த்- பாரு காதல் என்னவானது என்பதை நிறைய நட்சத்திரங்கள், கொஞ்சம் அனிமேஷன் கதாபாத்திரங்களுடன் சுவாரசியமாக சொல்கிறது, படம்.

இந்த கதைக்குள் மன்சூர் அலிகான் கோஷ்டி, சுனில் ரெட்டி–ஷா ரா கூட்டணி, கோவை சரளா, கருணாகரன்–யாஷிகா ஆனந்த், எம்.எஸ்.பாஸ்கர் டீம், முனீஷ்காந்த்- காளி வெங்கட் குரல்களில் வரும் லெஃப்ட், ரைட் என பல கிளைக் கதைகள் மூலம் வாய் விட்டுச்சிரிக்க வைக்கிறார், அறிமுக இயக்குநர் மீரா மஹதி.

திருடர்களாக வரும் சுனிலும் ஷாராவும் ரொம்பவே ஸ்பெஷல். அவர்களின் ஒவ்வொரு சேஷ்டையிலும் காமெடி தெறிக்கிறது. எம்.எஸ்.பாஸ்கரிடம் சிக்கிக்கொண்டு சுனில் படும் அவஸ்தை, ‘நான் ராயர் பேசுறேன்’ என்று கோவை சரளாவிடம் மன்சூர் அலிகான் போலவே பேசி மாட்டிக் கொள்ளும் சிலர், எப்போதும் போன் பேசிக்கொண்டே அலையும் மன்சூர் டீமின் அடியாள் என சில இடங்கள் சிரிப்பு மயம்.

கொடுத்த கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கும் நாயகன் தீரஜ், காமெடி காட்சிகளில் கூடுதலாக கவனம் ஈர்க்கிறார். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஸ்மிருதி வெங்கட் காகல் நடிப்பில் ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ சொல்ல வைக்கிறார.

கருணாகரன் மற்றும் யாஷிகா ஆனந்த் அந்த கொஞ்சம் காமெடி போர்ஷனிலும் ஸ்கோர் பண்ணி விடுகிறார்கள்.

லெஃப்ட் மற்றும் ரைட் என்ற அனிமேஷன் கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்திருக்கும் காளிவெங்கட் மற்றும் முனீஷ்காந்த், முகத்தை காட்டாமலேயே சிரிக்க வைப்பதோடு, அனிமேஷன் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கவுதம் ராஜேந்திரனின் அனிமேஷன் கதாபாத்திரங்களை நட்சத்திரங்களுடன் சேர்ந்து பயணிக்க வைத்தூ ரசிக்கவைக்கிறார்.

வித்யா சாகரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ரசம். நவரசம்.

அறிமுக இயக்குநர் மீரா மஹதி, கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கான ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்.

Comments (0)
Add Comment