லாந்தர் திரை விமர்சனம்

கோவையில் உதவி காவல் ஆணையராக இருக்கிறார், விதார்த், ஒருநாள் இரவில் ரெயின்கோட் அணிந்த மனிதர், சைக்கோத்தனமாக சாலையில் எதிர்படுபவர்களை எல்லாம் கொடூரமாகத் தாக்குகிறார். அவரைப் பிடிக்கச் சென்ற போலீஸ்காரர்களும் தாக்கப்படுகிறார்கள்.

அரவிந்த், அவரை பிடிக்க அதிரடியாகக் களமிறங்குகிறார். அவரால் ரெயின்கோட் மனிதரை பிடிக்க முடிந்ததா? அவர் யார், ஏன் அப்படி செய்தார்? என்பது மீதிக் கதை.

படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே கதைக்குள் ரசிகனை ஈர்த்து விடுகிறார், அறிமுக இயக்குநர் சாஜி சலீம். சஸ்பென்ஸ் த்ரில்லருக்கான கதைக்களம் என்பதால் தொடக்க காட்சிகளில் அந்த எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. ஆனால் இதெல்லாம் அந்த சைக்கோ மனிதர் யாரென்று தெரியும் வரை தான். அப்புறம் வழக்கமான கதையாகி விடுகிறது. அதனால தான் சைக்கோ மனிதரின் பிளாஷ்பேக் கூட பெரிய அளவில் பாதிப்பை பாதிப்பை எற்படுத்தாமல் கடந்து போகிறது.

அமைதியான போலீஸ் அதிகாரி அரவிந்தாக, விதார்த் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் மனைவியாக மஞ்சு டோரத்தி சின்ன அதிர்ச்சிக்கும் மயங்கி விழும் அந்த கேரக்டரில் அளவாக பொருந்துகிறார்.

மஞ்சுவாக வரும் சஹானாவுக்கு நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர். சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார். அவர் கணவர் விபின் பொருத்தமான பாத்திரப்படைப்பில் பளிச்.

இரண்டாம் பாதி திரைக்கதையிலும் படமாக்கத்திலும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இந்த லாந்தர் பிரகாசம் கூடியிருக்கும்.

Comments (0)
Add Comment