U/A சான்றிதழ் பெற்ற விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’

விஜய் மில்டன் எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக மேகா ஆகாஷ் நடிக்க, சரத்குமார், சத்யராஜ் முக்கிய வேடங்களில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் சார்பில் கமல் போஹ்ரா, டி.லலிதா, பி.பிரதீப், பங்கஜ் போஹ்ரா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இசையமைப்பாளர் ராயின் இசையில் “தீரா மழை…” மற்றும் இசையமைப்பாளர் ஹரி டாஃபுசியாவின் இசையில் “தேடியே போறேன்…” ஆகிய இரண்டு பாடல்களும் ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

விரைவில் திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் சமீபத்தில் தணிக்கை செய்யப்பட்டது. படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது.

விஜய் ஆண்டனி படம் என்றாலே தனித்துவமான கதைக்களம், விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் நிறைந்த திரைக்கதையோடு இருக்கும். இந்த படத்தில் அவற்றோடு இதுவரை விஜய் ஆண்டனி படத்தில் பார்த்திராத ஆக்ஷன் காட்சிகள் இந்த படத்தின் இன்னொரு பிளஸ்.

Comments (0)
Add Comment