பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன்

வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’, ‘சீமராஜா’ படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பொன்ராம். அவர் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் சண்முக பாண்டியன் நாயகனாக நடிக்கிறார்.

இந்தப் படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மறைந்த நடிகர் விஜயகாந்துடன், ‘புலன் விசாரணை’, ‘கேப்டன் பிரபாகரன்’, ‘சந்தனக் காற்று’ படங்களில் சரத்குமார் நடித்திருந்தார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

முன்னதாக, சண்முக பாண்டியன் நடித்துள்ள ‘படைத் தலைவன்’ திரைப்படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment