முத்துராமலிங்கத் தேவரின் வாழ்வில் நடந்த சிறு வயது சம்பவங்கள் தொடங்கி அவர் வாழ்வு முற்றுப்பெறும் வரையிலான ஒற்றை பொருளையும் வரையிலான சம்பவங்களே கதைக்களம்.
இம்மானுவேல் கொலை வழக்கில் முத்துராமலிங்கத் தேவர் விடுதலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையின் போது, தேவரின் பெருமைகளை உணர்ந்த ஒரு வக்கீல், பின்னர் தனது ஜூனியர் வக்கீல்களிடம் தேவரின் வாழ்வை சொல்வதாக படம் தொடங்குகிறது.
அந்த வக்கீலாக இயக்குனர் அரவிந்தராஜே நடித்துள்ளார்
மழலைப் பருவத்திலேயே தாயை இழந்து இஸ்லாமியத்
தாயிடம் பால் குடித்து வளர்ந்தது, திருமணம் செய்து கொள்ளாமல்
தவிர்த்தது.
.சுதந்திரப் போராட்டத்தின் போது சுபாஷ் சந்திரபோசுடன் இணைந்து பெரும் பங்காற்றியது… தேசம் சுதந்திரம் பெற்ற பிறகு காங்கிரஸ் கட்சியுடன் மோதல் போக்கு ஏற்பட்டு பார்வர்ட் பிளாக் கட்சியில் இணைந்தது…
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பல்வேறு சமூக பணிகளில் தன்னை இணைத்துக் கொண்டு தென் மாவட்டங்களில் பலம் வாய்ந்த தலைவராக உருவானது… தேவரின் வளர்ச்சியி ல் அச்சமடையும் காங்கிரஸ் தலைமை அவரை மீண்டும் காங்கிரஸில் இணைய வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு அது முடியாமல் போக, அவர் மீது சாதி வெறியர் என்ற அடையாளத்தை பதிக்க முயற்சிப்பது என தேவரின் மேலாண்மையை சொல்லிக் கொண்டே போகிறது படம்.
சாதி மோதல்களை தடுப்பதற்கான அரசின் அமைதி பேச்சு வார்த்தையின் போது, தலித் சமூக மக்களின் தலைமையாக இயங்கிய இமானுவேல் சேகரன், மர்ம கும்பலால் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக முத்துராமலிங்க தேவர் சேர்க்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்.
தன்னை நிரபராதி என்று நிரூபிப்பதற்காக சட்ட போராட்டத்தில் ஈடுபடும் முத்துராமலிங்க தேவர், அதில் வெற்றி பெற்றாரா? இல்லையா ?, அதன் பிறகு அவர் வாழ்க்கை என்னவானது என்பதை திரைப் படுத்தி இருக்கிறார்கள்.
முத்துராமலிங்கதேவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெ.எம்.பஷீர், தோற்றம், நடிப்பு, உடல் மொழி, வசன உச்சரிப்பு என ஒவ்வொரு அசைவுகளிலும் முத்துராமலிங்க தேவரை கண் முன் கொண்டு வருகிறார்.
ஜவஹர்லால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரது கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் உருவ ஒற்றுமையில் கச்சிதமாக பொருந்திப் போக, பெருந்தலைவர் காமராஜர்
வேடத்துக்கு மட்டும் ஏனோ தானோ என்று என்று ஒரு ஆளை பிடித்துப் போட்டு இருக்கிறார்கள்.
இயக்குநர் பாரதிராஜா, ராதா ரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் குறைவான காட்சிகள் வந்தாலும், நெஞ்சில் நின்று போகிறார்கள்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களும் பின்ன ணி இசையும் படத்தின் கூடுதல் ஜீவனாகி விடுகிறது.
ஒளிப்பதிவாளர் அகிலன், சுதந்திரத்திற்கு முந்தைய காலக்கட்டம் மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகான காலகட்டம் என பீரியட் படத்திற்கு ஏற்ப ஒளி மற்றும் வண்ணங்களை கையாண்டு இந்த பயோபிக் படத்திற்கு உயிரூட்டி இருக்கிறார்.
திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ஆர்.அரவிந்தராஜ்.
படத்தின் முதல் பாதி டாக்குமெண்டரி போல் பயணித்தாலும், இரண்டாம் பாதியில் சரியான களத்தில் பயணித்து அதை சரி செய்து விடுகிறார். சிறையில் இருந்து தேவர் வந்த பிறகு அவர் உடல் நலிவுற்ற பின்னணியில் சிறையில் அவருக்கு வழங்கப்பட்ட உணவுதான் காரணமா என்பதையும் விளக்கி இருக்கலாம்.