இளையராஜா, ராமராஜன் இணையும் புதிய திரைப்படத்துக்கு ‘கடவுள் தந்த பரிசு’ என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் காசிமாயன் கதை, திரைக்கதை எழுதி, இயக்குகிறார். வசனத்தை ராஜகோபால், எம்.அடைக்கலம் இருவரும் எழுதுகின்றனர்.
செந்தில், கோவை சரளா இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இதில் ராமராஜனுடன் இணைகின்றனர்.
படத்தின் பணிகள் பாடல் பதிவுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து படப்பிடிப்புக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நாயகி உள்ளிட்ட மற்ற கலைஞர்களின் பட்டியலை விரைவில் அறிவிக்க இருக்கிறது படக்குழு.
