ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி உள்ள நடிகர் ரவி மோகன் தயாரிக்கும் மூன்று படங்களில் ஒன்று ‘அன் ஆர்டினரி மேன்’. இயக்குநராக அவர் அறிமுகமாகும் இந்தப் படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் இசையமைப்பாளராக கெனிஷா அறிமுகமாக இருக்கிறார்.
ரவி மோகனைப் பிரிந்து விட்டதாக கெனிஷா தெரிவித்து சில மாதங்களே ஆன நிலையில், இந்த அறிவிப்பு திரை வட்டாரத்தில் சிறப்பு கவனம் பெற்றுள்ளது.
