இளையராஜா இசையில் ராமராஜன் நடிக்கும் புதிய படம்

இளை​ய​ராஜா, ராம​ராஜன் இணை​யும் புதிய திரைப்​படத்​துக்கு ‘கட​வுள் தந்த பரிசு’ என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள்.

அறி​முக இயக்​குநர் காசி​மாயன் கதை, திரைக்​கதை எழு​தி, இயக்​கு​கிறார். வசனத்தை ராஜகோ​பால், எம்.அடைக்​கலம் இரு​வரும் எழுதுகின்​றனர்.

செந்​தில், கோவை சரளா இரு​வரும் நீண்ட இடைவெளிக்​குப் பிறகு, இதில் ராம​ராஜனுடன் இணை​கின்றனர்.

படத்தின் பணி​கள் பாடல் பதிவுடன் தொடங்​கியது. அதைத் தொடர்ந்து படப்​பிடிப்​புக்​கான பணி​கள்​ நடை​பெற்​று வருகின்​றன. நாயகி உள்ளிட்ட மற்ற கலைஞர்களின் பட்டியலை விரைவில் அறிவிக்க இருக்கிறது படக்குழு.