சூப்பர் ஸ்டாரின் பாட்ஷா, அண்ணாமலை படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவின் அடுத்த படம்

ரஜினி நடிப்பில் பாட்ஷா, அண்ணாமலை வெற்றிப் படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய படம் அனந்தா. கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி இந்த படத்தை தயாரித்திருக்கிறார். வலியை அமைதியாக மாற்றும் நம்பிக்கையை மையமாகக கொண்ட ஐந்து ஆழமான, மனதை நெகிழ வைக்கும் கதைகளை இப்படம் வழங்குகிறது. பா. விஜய் வசனம் மற்றும் பாடல்களை எழுத, தேனிசைத் தென்றல் தேவா இசையமைத்துள்ளார். இப்படம் ஒவ்வொரு மனித வாழ்விலும் வழிகாட்டும் கண்ணுக்கு தெரியாத அருளை படம் பிடித்துக் காட்டுகிறது.

ஜெகபதி பாபு, சுஹாசினி மணிரத்னம்,
ஒய். ஜி. மகேந்திரன், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், ஸ்ரீ ரஞ்சனி, அபிராமி வெங்கடாசலம் மற்றும் பலர் நடித்துள்ள அனந்தா ஒரு வழக்கமான பக்தி படம் அல்ல. இது வாழ்க்கை, அன்பு மற்றும் இறைவனின் காணமுடியாத கிருபையை கொண்டாடும் ஒரு திரைக்காவியம்.

யதார்த்தம், உணர்ச்சி மற்றும் தெய்வீக ஆற்றல் ஆகியவற்றை கலந்து, இப்படம் ஐந்து இதயப்பூர்வமான கதைகளின் வழியாக விரிகிறது. கலைத்துறையில் மீண்டும் எழும் ஒரு நடனக் கலைஞர், இழப்பில் கருணையை கண்டறியும் ஒரு மனிதன், ஒரு அற்புதத்தை காணும் தாய், இயற்கையின் அமைதியில் நம்பிக்கையை கண்டறியும் ஒரு வெளிநாட்டவர் மற்றும் கண்ணுக்கு தெரியாத அருளால் காப்பாற்றப்படும் ஒரு தொழிலதிபர்.

இந்த கதைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணையும்போது, தெய்வீகம் என்பது கோவில்களிலோ அல்லது அற்புதங்களிலோ மட்டும் அடங்கிவிடுவதில்லை.. அது நம்பிக்கை, இரக்கம் மற்றும் சரணாகதியின் ஒவ்வொரு செயலிலும் அமைதியாக வாழ்கிறது என்பதை அனந்தா படம் வெளிப்படுத்துகிறது. இப்படத்தின் தமிழ் உலகளாவிய விநியோக உரிமையை
AP International நிறுவனம் பெற்றுள்ளது. சத்ய சாயி பாபாவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, இப்படம் 2025 நவம்பர் 23 முதல் டிஜிட்டல் தளத்தில் வெளியாகவுள்ளது.