கதாநாயகன் ஜீவாவுக்கு திரைப்பட இயக்குநராவது கனவு. நாயகி ஹரிஷ்மிதாவுக்கு பாடகியாக வேண்டும் என்பது கனவு.
ஆளுக்கொரு கனவைத் துரத்திக் கொண்டிருக்கும் இவர்களை காதல் இணைத்து வைக்கிறது.
இவர்களுடைய காதலுக்கு ஒரு தடை, அதுவும் கனவு வடிவிலேயே வருகிறது.அது என்ன? அதன் விளைவென்ன? என்பதை காதல் மிளிர மிளிர சொல்லியிருப்பதே இந்த ட்ரீம் கேர்ள்.
நாயகனாக வரும் ஜீவா,திரைப்படக் கனவோடு திரியும் இளைஞனை கண்முன்
நிறுத்துகிறார்.
கனவுக் காதலியை தனது படத்தின்
நாயகியாக சந்திக்க நேரும் இடத்தில் அவரது ரியாக்ஷன் அடடா ரகம்.
நாயகியாக வரும் ஹரிஷ்மிதாவுக்கு சூது கவ்வும் படத்தை தொடர்ந்து கிடைத்த இன்னொரு ஜாக் பாட் இந்தப் படம். கனவுப் பெண்ணாக ஒருவித ஸ்டைலிஷ் தோற்ற த்தில் நடிப்புக்கு அழகு செய்து விடுகிறார். பிற்பகுதியில் கண்ணாடி அணிந்த பெண்ணாக இன்னொரு அழகு நடிப்பை தந்து இருக்கிறார். தன்னை கதாநாயகி ஆக்கிய இயக்குனருக்கும் இவருக்குமான நட்பும் காதலும் கவித்துவமான காட்சிப்பதிவு.
பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா
ஏற்றுக் கொண்ட வேடங்களில் நிரம்பி நிற்கிறார்கள்.
சாலமன்
போவாசின் கேமரா கதை நடக்கும் சூழலை ஊட்டியின் குளுமையோடு கண்களை நிறைக்கிறது; அப்படியே மனதையும்.
இசையமைத்த இளமாறன் படத்தில் ஒரேயொரு பாடலிலும் கூட தன் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். பின்னணி இசையும் நன்று.
எழுதி இயக்கியிருக்கிறார் எம்.ஆர்.பாரதி. திகட்டத் திகட்ட ஒரு முழுமையான காதல் கதையைக் கொடுக்கவேண்டும் என்பதில் ரொம்பவே மெனக்கெட்டிக்கிறார். இன்றைய காதல் ஜோடியின் உணர்வுகளை திரையில் சொன்ன விதத்திலும் இவர் செய்திருப்பது காதலுக்கு உரிய மரியாதை.
காதல் ஜோடியின் எக்ஸ்கள் மட்டும் சந்தேகப் பிராணிகளாகவே படைக்கப்பட்டிருப் பது மட்டும் நெருடல். இதைத் தவிர்த்துப் பார்த்தால் இந்தக் கனவுப் பெண்ணுக்கு நிச்சயம் நெஞ்சில் இடம் உண்டு.
ரேட்டிங்: 5/10.