வசூலில் அடித்து நொறுக்கும் தாய்க்கிழவி

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான ‘தாய் கிழவி’ படம் ரசிகர்களின் கொண்டாட்டத்துக்குஉரியதாகி இருக்கிறது. திரைக்கு வந்த மூன்றே தினங்களில்
உலகளவில் 22 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்த வசூல் படக்குழுவினரை பெரும் உற்சாகத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இந்த படம் வெளியாகும் முன்பே ஓடிடி உரிமம், தொலைக்காட்சி உரிமம், இசை உரிமம் உள்ளிட்ட அனைத்தையும் விற்றதன் மூலமே படக்குழுவினருக்கு நல்ல லாபம் வந்து சேர்ந்து விட்டது. இதனால் திரையரங்க வசூல் என்பது போனஸ் லாபம் தான்.