தர்ணா திரைப்படத் தொடக்க விழா

எஃப் எம் எஸ் மீடியாஸ், சி எஸ் எம் கிரியேஷன், சஷ்டி சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் “தர்ணா”

ஜனவரி மாதம் வெளியான “ராட்ட” என்ற வெற்றித் திரைப்படத்தைத் தொடர்ந்து அதே கூட்டணி தற்போது “தர்ணா” என்ற திரைப்படத்தை நாமக்கல் மாவட்டத்தின் குமாரபாளையம் பகுதியில் மிகவும் பிரபலமான திருக்கோயிலாக விளங்கும் சூரியகிரி மலையில் அமைந்துள்ள தமிழ்க்கடவுள் முருகன் திருக்கோயிலில் திரைப்படத் தொடக்க விழா (பூஜை) இனிதே சிறப்பாக நடைபெற்றது.

தொடக்க விழா பூஜையில் பிரபல நடிகர் – நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், இணைத் தயாரிப்பாளர் சிஎஸ்எம் பழனிசாமி, சஷ்டி அ. பழனிசாமி, நிர்வாகத் தயாரிப்பாளர் டாக்டர் மூதுரை பொய்யாமொழி ஆகியோருடன் தொழில் அதிபர்கள், திரைப்பட நண்பர்கள், பொதுமக்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டு படத் தொடக்க விழாவினைச் சிறப்பித்தனர்.

முதல் காட்சியினை இயக்குநர் சக்திவேல் நாகப்பன் ஆக்ஷன் சொல்ல, நிர்வாகத் தயாரிப்பாளர் டாக்டர் மூதுரை பொய்யாமொழி கிளாப் அடிக்க , சந்திரன் சுவாமி ஒளிப்பதிவு செய்ய, படத்தின் நாயகன் கருந்தமிழ் சூரியன், நாயகி எலன் ஆகியோர் முதல் காட்சியை சிறப்பாக நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றனர்.

ஒரு வித்தியாசமான அரசியல் களத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்துக்கு பிரபல இசை அமைப்பாளர் இசை இளவரசன் பரணி இசையமைக்கிறார். “தர்ணா” திரைப்படம் வருகின்ற தீபாவளி விடுமுறையை எதிர்நோக்கி வர இருக்கிறது.
ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களின் முக்கிய இடங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.