“அப்பா தான் என் முதல் சாய்ஸ்” –மனம் திறக்கிறார் முதல்வரின் மகன் ஜேசன் சஞ்சய்

தமிழக முதல்​வர் விஜய்​யின் மகன் ஜேசன் சஞ்​சய், ‘சிக்​மா’ என்ற படம் மூலம் இயக்​குந​ராக அறி​முக​மாகிறார். சந்​தீப் கிஷன் நடிக்​கும் இந்​தப் படத்தை லைகா புரொடக் ஷன் தயாரித்துள்​ளது.

சமீபத்​தில் வெளி​யான இந்​தப் படத்​தின் டிரெய்லர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்​தது.

தமிழ், தெலுங்​கில் வெளி​யாகும் இப்​படம் ஜூலை 31-ல் வெளியாவ​தாக இருந்​தது. அப்பா விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ அதற்கு முந்தின வாரத்தில் வெளியானதால் இதன் ரிலீஸ் தள்ளி வைக்​கப்​பட்​டது.

இந்நிலையில், தனது தந்தை விஜய் குறித்து மனம் திறந்து பேசியிருக்​கிறார் ஜேசன் சஞ்​சய். அவர் அளித்​துள்ள பேட்​டி​யில், “உங்​கள் தந்​தை​யிடம் இருந்து இப்​போது கற்​றுக்​கொள்ள வேண்டும் என்​றால் எதனை கற்று கொள்​வீர்​கள் என்ற கேள்விக்கு,
“நான் எனக்​கென்று ஒரு தனி அடை​யாளத்​தை​யும், தனி பெயரையும் உரு​வாக்க வேண்​டும் என்று அப்பா விரும்​பி​னார். நானும் அதே எண்​ணத்​தில் இருந்​தேன். எங்​கள் இரு​வரின் சிந்தனை​யும் ஒரே மாதிரி​யாக இருந்​தது. ‘உனக்கு எந்த உதவி தேவைப்​பட்​டாலும் என்னை அணுகலாம். ஆனால், நீயே முயற்சி செய்ய வேண்​டும்’ என்று அப்பா கூறி​னார்.
வாழ்க்​கை​யில் வரும் அனுபவங்​களை எதிர்கொண்டு அதிலிருந்து கற்​றுக்​கொள்ள வேண்​டும் என்​பதே அவரது விருப்​ப​ம். எனக்கு எப்போதும் துணை​யாக இருந்த அப்​பா, அம்மா மற்​றும் என் குடும்பத்​தினருக்கு நான் நன்​றி​யுள்​ளவ​னாக இருக்​கிறேன்” என்றார்.
தொடர்ந்து அவரிடம், “உங்​கள் பெயரைக் கொண்ட ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம் நீங்கள் இயக்கிய ‘சிக்​மா’ படத்தை பார்த்​து​விட்டு ‘வாங்க ஹாலிவுட்​டில் ஒரு படம் பண்​ணலாம்’ என்று அழைத்​தால் இந்​தி​யா​விலிருந்து உங்கள் முதல் சாய்ஸ் எந்த நடிகராக இருக்கும்? ” இந்தக் கேள்விக்கு அவர் சொன்ன பதில் அப்பா மீது அவர் கொண்ட அன்பையும் சேர்த்து வெளிப்படுத்துவதாக இருந்தது.
“எனக்கு முதலில் நினை​வுக்கு வரு​வது அப்பா தான். இரு​வரும் இணைந்​தால் அது அட்​ட​காச​மான கூட்​ட​ணி​யாக​வும் இருக்​கும். நான் இப்​போது தெரிவிக்​கும் இந்த கருத்தை நடிகர் ஜேசன் ஸ்டேதம் பார்க்க வேண்​டும் என்று நினைக்​கிறேன்” என்றாரே பார்க்கலாம்.
தந்தை தமிழக முதல்வராகி விட்ட போதிலும், ஹாலிவுட் நட்சத்திரம் ரேஞ்சுக்கு இன்னும் உயர்த்தி பிடிக்கிற மகன்கள் தான் அதாவது ரசிகர்கள் தான் முதல்வரின் பெரும் பலமாக இருக்கிறது.