பைட் கிளப் திரை விமர்சனம்

கால்பந்து விளையாட்டில் ஆர்வமாக இருக்கும் விஜயகுமார் சிறு வயது முதலே தனது குருவாக கார்த்திகேயன் சந்தானத்தை ஏற்று அவர் வழியில் நடக்கிறார். குருவோ கால்பந்து வீரராக விரும்பி தோற்றவர்.கார்த்திகேயன் சந்தானம் தான் ஒரு மிகப்பெரிய புட்பால் பிளேயராக மாற வேண்டும் என எண்ணி அதற்காக முயற்சி செய்து அதில் தோற்றுப் போகிறார். அந்த ஊரில் உள்ள ரவுடியிசத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இளைஞர்களை கால்பந்து பக்கம் திருப்ப முயற்சிப்பவர், கோச்சிங் கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்துகிறார். அவர் நல்வழிப்படுத்தும் சிறுவர்களில் விஜயகுமாரும் ஒருவர்.
இதற்கிடையே கார்த்திகேயன் சந்தானத்தின் தம்பி அவிநாஷ் ரகுதேவன் ஊரில் உள்ள இளைஞர்களை மீண்டும் கஞ்சா ரவுடியிசம் என திசை திருப்பப் பார்க்கிறார். இது பிடிக்காத கார்த்திகேயன் சந்தானம் அவரைக் கண்டிக்கிறார்.
இதனால் கடுப்பான அவிநாஷ் ரகுதேவன் மற்றும் அவரது கூட்டாளி சங்கர் தாஸ் இருவரும் சேர்ந்து கார்த்திகேயன் சந்தானத்தை கொலை செய்து விடுகின்றனர். கொலைப் பழியை ஏற்றுக்கொண்டு கார்த்திகேயன் சந்தானத்தின் தம்பி அவிநாஷ் ரகுதேவன் ஜெயிலுக்கு சென்று விடுகிறார். இந்த கேப்பை பயன்படுத்திக் கொண்ட அவிநாஷ் கூட்டாளி சங்கர் தாஸ் கஞ்சா ரவுடியிசம் என பணத்தில கொழித்து அரசியலிலும் கவுன்சிலர் ஆகி விடுகிறார்.
ஜெயிலில் இருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலையாகி வரும் அவிநாஷ் ரகுதேவன் தன் கூட்டாளியை பழிவாங்க விஜயகுமாரை ஏவி விடுகிறார். அவர் குருவின் கட்டளையை எற்றாரா? அல்லது தனது கால்பந்து கனவை நோக்கி சென்றாரா? என்பதே அடிதடிக்கு கறைவில்லாத இந்த ‘பைட் கிளப்’.
வடசென்னை படத்திற்குப் பிறகு மீண்டும் அதே பாணியில் உருவாகி இருக்கும் மற்றொரு திரைப்படம்.
படத்தின் சிறப்பு, ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகள் தான்.
கடடான உடற்கட்டும், தெனாவட்டு முகவெட்டுமாய் உறியடி விஜய்குமார். அந்த கேரக்டருக்குஅச்சு அசலாக பொருந்திப் போகிறார்.கால்பந்து மீது நேசம், அக்ஷன் காட்சிகளில் வேங்கை பாய்ச்சல் என ஏற்ற பாத்திரத்தில் இன்னொருவரை யோசிக்க முடியாத அளவுக்கு நிரம்பி நிற்கிறார்.
வில்லன்களில் அவினாஷ் ரகுதேவன் பளிச். பெஞ்சமினாக வருகிற கார்த்திகேயன் சந்தானம் தனது பாத்திரத்தில் நின்று நிதானித்துஆடுகிறார்.
நாயகி மோனிஷா மோகன் ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டும் வந்து போகிறார்.
விக்கி, அம்ரின் அபூபக்கர் கூட்டணி சண்டைக் காட்சிகளில் கண்களுக்கு மூச்சு முட்டுகிறது.
அடிதடிக்கு பஞ்சமில்லாத கதைக்களத்தை தன் பின்னணி இசையால் அதிரச் செய்திருக்கிறார் கோவிந்த் வசந்தா.
‘இந்த சண்ட யார் செத்தாலும் நிற்காது’ என்ற தலைமுறை பகையையும், துரோகத்தின் விளைவையும் காட்ட முற்பட்டிருக்கிறார் அறிமுக இயக்குநர் அப்பாஸ் ஏ ரஹ்மத். வழக்கமான பழிவாங்கும் கதையாக இருந்தாலும் அதைத் திரைக்கதையாக்கிய விதத்தில் பாசாகி இருக்கிறார்