ஆயிரம் பொற்காசுகள் திரை விமர்சனம்

நாயகன் விதார்த்தும், சரவணனும் இணைந்து கழிப்பறை கட்டுவதற்காக வீட்டின் பின்புறம் குழி தோண்ட, அந்த குழியில் சோழர் காலத்து பொற்காசுகள் கிடைக்கிறது. அரசிடம் ஒப்படைக்க வேண்டிய புதையலை யாருக்கும் தெரியாமல் பிரித்துக் கொள்ள முடிவு செய்கிறார்கள். ஆனால், அந்த தகவல் ஊரில் உள்ளவர்கள் காதுக்குப்போய் அவர்களும் புதையலில் பங்கு கேட்கத் தொடங்க… இறுதியில் அந்த பொற்காசுகள் யாருக்கு கிடைத்தது? என்பதே இந்த கலகல ‘ஆயிரம் பொற்காசுகள்.

படத்தின் முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை நகைச்சுவை தோரணம் கட்டி தொங்க விட்ட திரைக்கதை பலம். நட்சத்திரங்களில் விதாரத், பருத்து வீரன் சரவணன் , உள்ளிட்ட அத்தனைபேரும் சிரிக்கவைப்பது ஒன்றையே பிரதானமாக செய்து அதில் வெற்றியும பெற்றிருக்கிறார்கள். சோக்காட்சிகளுக்கென்றே சினிமா கண்டு பிடித்த செம்மலர்அன்னம் கூட அவர் பங்குக்கு சிரிக்க வைக்கிறார் என்றால் பார்த்துக், கொள்ளுங்களேன்.

.அறிமுக இயக்குநர் ரவி முருகையா எழுதி இயக்கியிருக்கிறார். புதையல் மற்றும் அதை பங்கு போட்டுக்கொள்வது, என்ற சிறு விஷயத்தை வைத்துக் கொண்டு மையப்படுத்தி சிரிக்க வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்.
மின்னுது பொன்.