அசோக் செல்வன் பள்ளியில் படிக்கும் போது , சக மாணவி கார்த்திகா முரளிதரனை ஒருதலையாக காதலிக்கிறார். ஆனால், அந்த காதலை அவரிடம் சொல்லாமலே பள்ளிப் படிப்பு முடிந்து விடுவதால் அந்த காதல் பணால். கல்லூரியில் படிக்கும் போது ரியாவை காதலிக்கிறார். ரியாவுடனான காதலும் தோல்வியடைகிறது. இறுதியாக மேகா ஆகாஷை காதலிக்கும் அசோக் செல்வனின் காதல் வெற்றி பெற்றதா?, அல்லது அதுவும் வழக்கம் போல் தோல்வியடைந்ததா? என்பதை ஜாலியாக சொல்வது தான் சபா நாயகன்.
மூன்று வெவ்வேறு காதல் கதைகள், அதில் வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்திருக்கும் அசோக் செல்வன், நடனம், நகைச்சுவை ஆகியவற்றிலும் அசத்தியிருக்கிறார். தனது காதல் தோல்விகளை கூட நகைச்சுவை ததும்ப சொல்லி ரசிகர்களை ஈர்த்து விடுகிறார்.
கார்த்திகா முரளிதரன், சாந்தினி, மேகா ஆகாஷ் என மூன்று நாயகிகள், மூன்று பேரில் கார்த்திகா முரளிதரன் நடிப்பில் முன்னிற்கிறார்படத்தின் கடைசி 20 நிமிடங்கள் மட்டும் வந்தாலும் மேகா ஆகாஷின் என்ட்ரி படத்துக்கு புது எனர்ஜி தந்து விடுகிறது. இன்னொரு காதலி சாந்தினி வழக்கம்போல..
ஒளிப்பதிவாளர்கள் பாலசுப்பிரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஆகியோரின் ஒளிப்பதிவு மூன்று கால கட்டங்களையும் ரசனை ததும்ப கண்களில் நிறுத்தி விடுகிறது..
லியோன் ஜேம்ஸின் இசையில் பாடல்கள் பரம சுகம்.
எழுதி இயக்கியிருக்கும் சி.எஸ்.கார்த்திகேயன்காதல் தோல்வியை சாதாரணமாக எடுத்துக்கொண்டு அடுத்தக் கட்டத்திற்கு பயணிக்க வேண்டும் என்ற கருத்தை ஜாலியாக சொல்லியிருக்கிறார்.
இளைஞர்கள் கொண்டாடுவார்கள்.
