ஜிகிரி தோஸ்த் திரை விமர்சனம்

பொறியியல் மாணவர்களான ஷாரிக் ஹசன், அரன், விஜே ஆஷிக் நண்பர்கள். இவர்களில் அரன் 500 மீட்டரில் உள்ள செல்போன் உரையாடல்களை ஒட்டுக் கேட்கும்படியான ஒரு சாதனத்தை உருவாக்குகிறார். ஆனால், அவருடைய கண்டுபிடிப்பு சரியாக வேலை செய்யாததால் கல்லூரி நிர்வாகம் அதை நிராகரித்து விடுகிறது.

இந்த சமயத்தில் தொழிலதிபர் ஒருவரின் மகள் கடத்தப்பட, தான் கண்டுபிடித்த சாதனத்தை பயன்படுத்தி அந்த பெண்ணை காப்பாற்ற அரன் நண்பர்களுடன் களத்தில் இறங்குகிறார். அந்த சாதனம் சரியாக வேலை செய்ததா?, நண்பர்கள் கடத்தப்பட்ட பெண்ணை காப்பாற்றினார்களா? என்பது திகுதிகு திரைக்கதை.

ஷாரிக் ஹசன், அரன், விஜே ஆஷிக் ஆகியோர் கொடுத்த கேரக்டரில் நிறைவு. ஷாரிக் ஹசனின் காதலியாக அம்மு அபிராமி, இன்னொரு நாயகியாகபவித்ரா லட்சுமி நடிப்பில் தேர்ந்து தெரிகிறார்கள்.

வில்லனாக அமைச்சர் கதாபாத்திரத்தில் துரை சுதாகர் பிரகாசிக்கிறார்..

ஆர்.வி.சரணின் ஒளிப்பதிவும் அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசையும் படத்தின் இன்னபிற பலம்..

கதையின் நாயகனான அரன், கதை எழுதி இயக்கியிருக்கிறார்முதல்பாதியில் ஜாலி கலாட்டா என போகும் படம் இரண்டாம்பாதியில் வேறு டிராக்கிலங் ரசிக்க வைக்கிறது.
குறைந்த பட்ஜெட்டிலும் ஒரு தரமான படம்.