மூன்றாம் மனிதன் திரை விமர்சனம்

மருத்துவமனை ஊழியரான சோனியா அகர்வாலின் கணவர் கொலை செய்யப்படுகிறார். கொலையை புலன் விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரி பாக்யராஜ், பல அதிர்ச்சிகரமான உண்மைகளை கண்டு பிடிக்கிறார். கொலைக்கான பின்னணி என்ன என்பதை சஸ்பென்ஸ் திரில்லர் ட்ராக்கில் சொல்வதே ‘மூன்றாம் மனிதன்.

போலீஸ் அதிகாரி வேடததில் நடிப்பில் புதுமுகம் காட்டியிருக்கிறார், கே.பாக்யராஜ். நாயகியாக வரும் பிரணா, நடிப்பில் அறிமுகம் அல்ல, ‘அருமை’ முகம்.

பிராணாவின் கணவராக இயக்குநர் ராம்தேவ் இன்னொரு அசத்தல் அறிமுகம். மதுவுக்கு அடிமையானவர் வேடத்தில் நடித்திருந்தாலும், இவரது தத்தவ வசனங்கள் கரகோஷத்துக்குரியவை. இயக்கத்திலும் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார். குடும்பம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் ஒருஅன்யோன்யம் தெரிகிறது.

மணிவண்ணனின் ஒளிப்பதிவும், வேணு சங்கர் மற்றும் தேவ்.ஜி ஆகியோரது இசையும் காட்சிகளை கண்முன் நிறுத்துகிறது.

ஒரு குடும்பத்தின் எதிர்காலமே அந்த குடும்பத்தின் பெண் வாழும் முறையில் தான் இருக்கிறது, என்பதை கருத்தாகவும் அதேநேரம் திரில்லராகவும் தந்த விதத்தில் இந்த மூன்றாம் மனிதன் முதல் தர மனிதனாகி விடுகிறான்.