உயிருக்கு போராடும் தனது மகளின் அறுவை சிகிச்சைக்காக லண்டன் செல்லும் அருண் விஜய், எதிர்பாராத பிரச்சினையில் சிக்கி லண்டன் சிறையில் அடைக்கப்படுகிறார்.
சிறைச்சாலை அதிகாரியான எமி ஜாக்சனிடம் தனது நிலையை சொல்லி புரிய வைக்க முயற்சித்தும் பலனின்றிப் போகிறது.
இதற்கிடையே, அந்த சிறைச்சாலையில் இருக்கும் மூன்று தீவிரவாதிகளை தப்புவிக்க பயங்கரவாத குழு மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டி அதை செயல்படுத்துகிறது அவர்கள் தப்பி செல்வதற்கு தடையாக இருக்கிறார், அருண்விஜய்.. அவரை மீறி கைதிகள் தப்பித்தார்காள என்பது அதிரடி ஆக்ஷன் திரைக்கதை.
மகளின் உயிரை காப்பாற்ற போராடும் ஒரு பாசமிகு தந்தையாக அறிமுகமாகி ரசிகர்களை ஈர்க்கும் அருண் விஜய், லண்டன் சிறைச்சாலையில் எடுக்கும் ஆக்ஷன் அவதாரம் பிரமிப்பின் உச்சம். ஒவ்வொரு காட்சியிலும் அவரது மெனக்கெடல் தெரிகிறது. ஆக்ஷன் காட்சிகளில் அவரது ஆக்ரோஷம் தனிரகம்.
சிறைச்சாலை அதிகாரியாக எமி ஜாக்சன். அறிமுகமாகும்போது எதிர்பார்க்க வைக்கிறார். சில அதிரடி காட்சிகளில் அமர்க்களப்படுத்தினாலும், அவ்புறம் அடங்கிப்போகிறார். செவிலியர் வேடத்தில் வரும் நிமிஷா சஜயன் பேசும் மலையாளத் தமிழ் தனி அழகு..
வில்லனாக நடித்திருக்கும் பரத் போபண்ணா, சர்தார் வேடத்தில் தமிழ் பேசி நடித்திருக்கும் அபி ஹாசன், விரஜ், ஜேசன் ஷா, சிறுமி இயல் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அளவு தாண்டாத நடிப்பில் மனசுக்குள் இடம் பிடித்து விடுகிறார்கள்.
சந்தீப் கே.விஜயனின் கேமரா ஆக்ஷன்காட்சிகளில் மிரட்டிவைக்கிறது..
ஒரு சிறைச்சாலைக்குள் நடக்கும் ஆக்ஷன் சம்பவத்தை மையமாக வைத்துக்கொண்டு அதற்கு சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் விஜய். அருண்விஜய் யார் என்பது தெரிய வந்ததும் அடுத்தடுத்த சம்பவங்கள் எப்படி இருக்க வேண்டும்? அங்கே மட்டும் சறுக்கியிருக்கிறார், இயக்குனர்.
என்றாலும் அருண் விஜய்யின் துடிப்பும் துள்ளலுமான ஆக்ஷன் கடைசிவரை ரசிகனை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது.
