இமெயில் திரை விமர்சனம்

நாயகன் அசோக்- நாயகி ராகினி திவேதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆன்லைன் கேமில் ஆர்வம் உள்ள ராகினி திவேதிக்கு அதன் மூலமாகவே ஒரு பிரச்சினை வேண்டாத விருந்தாளியாக வந்து சேர்கிறது. அந்த பிரச்சினையில் இருந்து மனைவியை காப்பாற்ற நினைக்கும் அசோக் கின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதனால், தானே நேரடியாக களத்தில் இறங்கி தனது பிரச்சினையை தீர்க்க நினைக்கும் ராகினி திவேதி, அதை எப்படி செய்கிறார்? அந்த பிரச்சனை என்ன?, அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை திகிலுக்கு குறை வைக்காத திருப்பங்களோடு சொல்வது தான் இந்த ‘இ-மெயில்.

கதையின் நாயகனாக அசோக், குறைவான வாய்ப்பிலும் நிறைந்து தெரிகிறார், நடிப்பில். நாயகியாக வரும் ராகினி சண்டைக்காட்சிகளில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

ஆதவ் பாலாஜி, பில்லி முரளி, ஆர்த்தி ஸ்ரீ கேரக்டருக்கேற்ற தேர்வாக தங்களை நிரூபிக்கிறார்கள்..வில்லனாக பில்லி முரளி ஒ.கே.

மனோபாலா, லொள்ளு சபா மனோகர் சிரிக்க வைக்கிறார்கள்.

எம்.செல்வத்தின் ஒளிப்பதிவும் கவாஸ்கர் அவினாஷ் இசையும் ஜுபினின் பின்னணி இசையும் திரைக்கதைக்கு பக்க பலம்.

ஆன்லைன் விளையாட்டுகளின் மூலம் ஏற்படும் ஆபத்துகளை மையப்படுத்திய கதையை சஸ்பென்ஸாகவும், திருப்பங்களுடனும் சொல்லியிருக்கும் இயக்குநர் எஸ்.ஆர்.ராஜன், நல்லதோர் நம்பிக்கை வரவு..
க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் கதையை, படத்தின் துவக்கம் முதல் முடிவு வரை, அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்புடன் நகர்த்தி செல்வதில் ரசிககைனை கடைசி வரை படபடப்பாக வைத்திருக்கிறார். இமெயிலின் இன்னொரு பக்கத்தையும் காட்டி எச்சரித்த விதத்தில் மனசுக்கு நெருக்கமாகி விடுகிறது, இந்த படைப்பு