மகிழ்திருமேனிஇயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படம் தீபாவளிக்கு திரைக்கு வந்து விடும் என்கிறார்கள். லைகா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். அர்ஜூன், திரிஷா, ரெஜினா, ஆரவ் நடிக்கிறார்கள்.
இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியது. படப்பிடிப்புக்கு சற்று நீண்ட இடைவெளி விழுந்த நேரத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட்அக்லி’ படத்தில் நடிக்கத் தொடங்கினார், அஜித். அந்த படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்த நேரத்தில் விடாமுயற்சி படக்குழுவினர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை தொடங்க முன்வர, இப்போது இடையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட்பேட் அக்லி’ படப்பிடிப்பில் அஜித் கலந்து கொண்டார்.
அந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் முடிவடைந்து விட்டதை அடுத்து ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் அஜார்பைஜனில் தொடங்கி விட்டது. அங்கு நடக்கும் ஒரு மாத படப்பிடிப்பில் முழு படத்தையும் முடித்து விட்டே ஊர் திரும்புகிறார்கள். இதனால் ஏற்கனவே திட்டமிட்டபடி படம் தீபாவளி ரிலீஸ் உறுதி என்கிறார்கள்.