‘‘முதல் பாகத்தில் 40 நாட்கள்…இரண்டாம் பாகத்தில் 70 நாட்கள்…’’
‘இந்தியன் தாத்தா’வுடன் வாழ்ந்த அனுபவம் பற்றி டைரக்டர் ஷங்கர் பெருமிதம்
1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்று பல விருதுகளை குவித்தது. இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகவுள்ளது.
பல தடைகளையும் போராட்டங்களையும் தாண்டி ஒரு வழியாக இப்படம் திரையில் வெளியாகவுள்ளது. 2019 ஆம் ஆண்டு துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு பலமுறை தடைபட்டது. படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராமல் நடந்த விபத்தால் மூன்று நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பிறகு கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மேலும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இடையே பிரச்சினை போன்ற பல காரணங்களால் இப்படம் கிடப்பில் போடப்பட்டது.
இதுமட்டுமல்லாமல் இப்படத்தில் நடித்த விவேக், நெடுமுனி வேணு, மனோபாலா ஆகியோர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தனர். இனியுமஇந்த படம தொடரவாய்ப்பில்லைஎன்று பேசப்பட்ட நிலையில் தான் கமலின் விக்ரம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு கமல் தன் முயற்சியினால் இப்படத்தை மீண்டும் துவங்க செய்தார். அதைத்தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிவிற்கு வந்துள்ளது.
இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இரு பாகங்களாக தயாராகியிருக்கும் இப்படத்தின் முதல் பாகம் ஜூன் மாதம் வெளியாவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு தற்போது ஜூலை 12 ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. இதையொட்டி இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது.
இந்தியன் படத்தின் தொடர்ச்சி தான் இந்த இந்தியன் 2 . என்றாலும் கதைக்களம் 2020 ஆம் ஆண்டு நடைபெறுவது போல அமைக்கப்பட்டுள்ளது. இடையில் காணாமல் போன இந்தியன் தாத்தா மீண்டும் பல வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்து ஊழலையும் ஊழல் பேர்வழிகளையும் அழிக்கிறார்.

முதல் பாகம் வந்து 28 வருடம் கழித்து இரண்டாம் பாகம் வரவிருக்கிறது..அப்படி பார்த்தால் இந்தியன் தாத்தாவிற்கு 120 வயதிற்கு மேல் இருக்குமே ? ட்ரைலரில் சண்டை காட்சிகள் எல்லாம் இடம் பெற்றுள்ளதே ? எப்படி 120 வயது தாத்தாவால் இதனை செய்யமுடியும் என ஒரு கேள்வி தான் ரசிகர்களிடம் இருந்து வந்தது. இதற்கு கமல்ஹாசனே விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதுபற்றி அவர் கூறுகையில், ‘‘சீனாவில் வர்மக்கலை தெரிந்த ஒரு நபர் 120 வயதில் ஆரோக்கியமாக உயிர் வாழ்கின்றார். இப்படத்திலும் சேனாதிபதிக்கு வர்மக்கலை தெரியும் என்றார். எனவே இங்கே வயது முக்கியமல்ல. வர்மம் தான் முக்கியம்.
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், நேற்று மாலை ‘இந்தியன் 2’ படத்தின் புதிய டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக, நேற்று காலை செய்தியாளர்களுக்காக வென்னை வடபழனியில்உள்ள திரையரங்கு ஒன்றில் டிரைலர் திரையிடப்பட்டது.
நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், “உலகளவில் ஒரு படத்தின் இரண்டாம் பாகம் மீண்டும் அதே இயக்குநர் எடுப்பது, அரிதாகத்தான் நிகழ்ந்துள்ளது. அதைச் சாத்தியமாக்கிய இயக்குநர் ஷங்கருக்கு நன்றி. அதில் எனக்கும் வாய்ப்பளித்ததற்கும் நன்றி. முக்கியமாக இந்தியன் 2 எடுப்பதற்குக் கருவைத் தந்து கொண்டிருக்கும் அரசியலுக்கு நன்றி. ஏனெனில் கரப்ஷன் இன்னும் அதிகமானதால் தான் இந்தியன் தாத்தா வருகைக்கு, உங்களிடம் அர்த்தம் இருக்கிறது.
இந்த மேடையில் மிகச் சந்தோஷமாக, இன்னொரு தலைமுறையுடன் நடித்துக் கொண்டிருக்கிறேன். நாங்கள் மதிக்கும் மிகப்பெரிய நடிகர்கள் சிலர் இப்போது இல்லை. மனோபாலா, நெடுமுடி வேணு, விவேக். நடிகர் விவேக் உடன் இப்போது தான் நடித்த மாதிரி இருக்கிறது. காலம் எப்படி உருண்டோடுகிறது என்பதற்கு இந்தியன் படம் சான்றாக இருக்கிறது.
ஷங்கர் இன்னும் இளைஞராக இருக்கிறார். அது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. ஷங்கரும் நானும் நினைத்தால் கூட இந்தியன் 2 மாதிரி படமெடுக்க முடியாது என்றார் ரவிவர்மன், ஆனால் எடுத்துள்ளோம் அதான் இந்தியன் 3. இந்தப்படம் உருவாகக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி. இந்தியன் படம் 5 வருடம் ஆகக் காரணம் நாங்கள் அல்ல, இயற்கையும் கொரோனா நோயும் தான் காரணம். அதையெல்லாம் தாண்டி இப்படத்தை எடுக்கத் துணையாக நின்ற லைகாவிற்கும், ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கும் நன்றி. தம்பி உதயநிதி அவர் எங்கள் ரசிகனாக இருந்ததால், இதை எடுக்கத் துணிந்தார். அவருக்கும் நன்றி.
சித்தார்த் இங்கு மேடையில் மட்டுமல்ல, என்னிடமும் அப்படித்தான் பேசுவார். அவ்வளவு பணிவாக இருப்பார். நல்ல மனசுக்காரார். இந்தப் படம் பல சாதனைகள் படைக்கும். படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. ஜெய்ஹிந்த்.” என்றார்.
இயக்குநர் ஷங்கர் பேசுகையில், “பொதுவாக எப்போதும் என்னுடைய படங்கள் இது இப்படி நடந்தால், எப்படி இருக்கும் என்கிற கான்செப்டில் தான் இருக்கும். இந்தப்படமும் அந்த மாதிரி தான். இப்போதிருக்கும் நாட்டின் சூழ்நிலையில், இந்தியன் தாத்தா வந்தால் என்ன நடக்கும் என்பது தான் இப்படம். இப்படத்தில் மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது. அனைவரும் மிக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். இந்தியன் படத்தைப் பொறுத்தவரை அதன் கதை தமிழ்நாட்டில் நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கும், ஆனால் இந்தியன் 2 கதை, கொஞ்சம் வெளியே சென்று, இந்தியா முழுக்க, எல்லா மாநிலங்களிலும் நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கதையைப் பொறுத்த வரைக்கும், இதில் நிறைய கேரக்டர்கள் இருக்கிறது. இந்தியன் தாத்தா தவிர, நிறைய குடும்பங்கள் இந்த படத்தில் இருக்கிறது. இந்தியா முழுக்க இருக்கும் குடும்பங்கள் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு அவர்களை இந்தப்படம் கொஞ்சம் யோசிக்க வைக்கும் என நான் நம்புகிறேன்.
இந்தப் படம் மிகச் சிறப்பாக வர மிக முக்கியக் காரணம் கமல் சார் தான். பார்ட் 1 இல் கூட நாங்கள் அவருக்கு 40 நாள் தான் மேக்கப் போட்டு தான், ஷூட் செய்தோம். ஆனால் இந்தப் படத்தில் 70 நாட்கள் அவர் மேக்கப் போட்டு நடித்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் காலை 4 மணிக்கு வந்து, மூன்று மணி நேரம் மேக்கப் போட்டு ரெடியாக வேண்டும், சாப்பிட முடியாது தண்ணீர் மட்டும் தான் குடிக்க முடியும். மிகக் கஷ்டப்பட்டு, மிக அர்ப்பணிப்போடு இருப்பார். அவர் உழைப்பைப் பார்த்து எனக்குப் பிரமிப்பாக இருக்கும். ஷூட்டிங் முடிந்தாலும் அவர் தான் கடைசியாகப் போவார். அந்த மேக்கப் கலைப்பதற்கு 1 மணி நேரமாகும்.
முதல் படத்தில் அவர் மேக்கப் போட்டு வந்து நின்ற போது ஒரு சிலிர்ப்பு வந்தது, இப்போது இந்த படத்தில் மீண்டும் அவர் மேக்கப் போட்டு வந்த போது, அதே சிலிர்ப்பு வந்தது. அவரை செட்டில் பார்க்கும்போது கமல் சார் என்றே தோன்றாது, ஏதோ இந்தியன் தாத்தா நம்முடனே இருக்கிறார் என்பது போல் தான் தோன்றும். அவர் இந்தியன் தாத்தாவாக தான் வாழ்ந்திருக்கிறார்.
இந்தியன் பார்ட் 1 வந்த போது, பிராஸ்தடிக் மேக்கப் அந்த அளவு வளரவில்லை, அதனால் அது ரொம்ப திக்காக இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அந்த நிறுவனத்திடம் சொல்லி மேக்கப் தின்னாக இருக்க வேண்டும் எனக்கேட்டு போட வைத்தோம். அதனால் நீங்கள் கமல் சார் நடிப்பை இன்னும் நன்றாகப் பார்க்கலாம். ஒரு சீன் 4 நாள் எடுத்தோம். கயிற்றில் தொங்கிக் கொண்டு, வேறு மொழி பேசி, கையில் வரைந்து கொண்டு நடிக்க வேண்டும். உலகில் யாராலும் முடியாது ஆனால் கமல் சார் அதைச் செய்துள்ளார். இன்னும் பல காட்சிகள் சொல்லிக்கொண்டே போகலாம். கமல் சார் உங்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி” என்றார்.
நடிகர் சித்தார்த் பேசுகையில், “21 வருடங்களுக்கு முன்பு, திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஷங்கர் சார் எனக்குத் தந்தார். இப்போது 21 வருடங்களுக்குப் பிறகு, என் ஆசான் கமல் சாருடன் நடிக்கும் வாய்ப்பை தந்திருக்கிறார் நன்றி சார். ஒரு புதுமுகமாக என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கையை விட, இந்த படத்தில் நீங்கள் கொடுத்த பொறுப்பை மிக எளிதாக விட்டு விடமாட்டேன். அதற்கான உழைப்பை தந்துள்ளேன் என நம்புகிறேன். கடந்த 20 வருடங்களில் நான் நடித்த பாத்திரங்களில் என்னுடைய பர்சனல் முகம், இந்த படத்தில் நிறைய இருக்கிறது. எனக்குமே இது பர்சனல் ஜர்னியாக இருந்தது. அற்புதமான அனுபவம். இந்த கதாபாத்திரத்தை தந்ததற்கு நன்றி சார். உங்கள் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும் நான் கமல் சாரின் தீவிரமான ரசிகன். அவர் எனக்கு எப்போதும் ஆசானாகவே இருந்திருக்கிறார். ஆனால் எப்போதெல்லாம் கேமரா முன்பு நிற்கிறேனோ, அப்போது மேலே இருந்து, அவருடைய உழைப்பும், நடிப்பும் தான் என்னை வழி நடத்தியது. இன்று நாடு இருக்கும் சூழ்நிலையில் இந்தியன் தாத்தா மீண்டும் வந்தால் எப்படி இருக்குமோ? அதுதான் இந்தியன் 2’’ என்றார்.
இப்படத்தின் தமிழ் பதிப்பு ‘இந்தியன் 2’ என்ற தலைப்பிலும், தெலுங்கில் ‘பாரதியுடு 2’ மற்றும் இந்தியில் ‘இந்துஸ்தானி 2’ என்ற தலைப்புகளில் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் தமிழ் பதிப்பு ‘இந்தியன் 2’ என்ற தலைப்பிலும், தெலுங்கில் ‘பாரதியுடு 2’ மற்றும் இந்தியில் ‘இந்துஸ்தானி 2’ என்ற தலைப்புகளில் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது