‘‘சீக்கிரமே மிரட்டும் ட்ரெய்லர்…படமும் அட்டகாசம்’’
‘தங்கலான்’ படம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. இதில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார். கோலார் தங்க வயல் பின்னணியில் பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
படத்தின் பின்னணி இசைக்கான பணிகள் நிறைவடைந்ததாகவும், ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் எனவும் படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தங்கலான் படத்தின் பின்னணி இசை அமைக்கும் பணிகள் முடிந்து விட்டது. என்னுடைய பெஸ்ட்டை இப்படத்துக்கு கொடுத்துள்ளேன். இந்த அட்டகாசமான திரைப்படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன். உங்களை வியக்க வைக்கும் மிரட்டலான ட்ரெய்லர் விரைவில் வெளியாக உள்ளது. இந்திய சினிமா ‘தங்கலான்’ படத்துக்காக தயாராகிக் கொண்டிருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.