முதல் நாளிலேயே ரூ.100 கோடி

விஜய்யின் ‘தி கோட்’ படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை வசூலித்துள்ளது..

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள இந்த படத்தை அர்ச்சனா கல்பாத்தி தனது ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் வியாழக்கிழமை (செப்.5) திரையரங்குகளில் வெளியானது

ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.43 கோடியை வசூலித்துள்ளது. தமிழகத்தில் படம் 38.3 கோடியையும், கேரளாவில் ரூ.5.80 கோடியையும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் முந்தைய படமான ‘லியோ’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.140 கோடியை வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.