2022 ஆம் ஆண்டு வெளியான ‘காந்தாரா’வில், மன்னராட்சிக் காலத்தில் மக்களுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்ட நூறு ஏக்கர் நிலத்தை அம்மன்னரின் வாரிசுகள் திரும்பக் கேட்கிறார்கள். மக்கள் மறுக்க, வற்புறுத்தி பெற முனைகிறார் மன்னர்.
அதில் அவர் முயற்சி பலனளிக்காமல் போக, அதன் பிறகு பெரும் படையுடன் போருக்கு வருகிறார்.அந்தப் போரிலும் மன்னர் படை தோல்வியுடன் திரும்புகிறது.
இதே கதையின் முதல் பாகமாக வந்திருப்பதே காந்தாரா அத்தியாயம் 1.
இனி…
காந்தாரா பழங்குடி இனத்தைச் சேர்ந்த நாயகன் ரிஷப் ஷெட்டி, காட்டை விட்டு வெளியே வந்து தங்களிடம் உள்ள விளைபொருட்களை விற்பனை செய்கிறார். அதோடு தம் மக்கள் மீது போடப்பட்டிருந்த தடைகளைத் தகர்த்து, துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார்.
ரிஷப் ஷெட்டி மற்றும் அவருடைய மக்களை எதிர்க்க முடியாமல் தடுமாறும் அரசர் ஜெயராம் அவர்களை சமரசம் பேச அழைக்கிறார். அவர்களுக்கான அனைத்து மரியாதையையும் வழங்குவதாக அறிவிக்கிறார்.
அதே நேரம் அவர்களின் தெய்வ சக்திகளைக் கட்டுப்படுத்தி காந்தாராவைக் கைப்பற்ற சதி செய்கிறார். அவரது சதியை ரிஷப் செட்டி எப்படி அடித்து நொறுக்குகிறார் என்பது விறு விறு ப்புடன் பிரமிப்பும் இணைந்த கதைக்களம்.
காட்டுப்பகுதி மக்களின் தலைவனாக ரிஷப் ஷெட்டி இயல்பான நடிப்பில் கவர்கிறார். அடி தடி காட்சிகளில் ஆவேசப் புயலாய் சீறுகிறார். சாமி வந்து ஆடும் காட்சிகள் சிலிர்க்க வைக்கின்றன.
நாயகியாக நடித்திருக்கும் ருக்மணி வசந்த், ராஜ வம்சத்துக்கே உரிய கம்பீரத்துடன் நாயகனுக்கு இணையாக நடிப்பில் மிரட்டியிருக்கிறார். நாயகன் மீதான இவரது காதல் பார்வை கூட அத்தனை கம்பீரம்.
மன்னராக நடித்திருக்கும் ஜெயராம், அவர் மகனாக நடித்திருக்கும் குல்சன் தேவய்யா ஆகியோர் பாத்திரத்துக்கு ஏற்ப நடிப்பை பரிமாறி இருக்கிறார்கள். குறிப்பாக ஜெயராமின் மகனாக வரும் குல்சன் தேவய்யா எரிச்சல் அடைய வைக்கிற இளவரசர் கேரக்டரில் வெளுத்து வாங்குகிறார்.
இசையமைத்த பி.அஜனீஸ் லோக்நாத், பாடல்களை
ரசனையாக தந்திருக்கிறார். பின்னணி இசை கதையின் உயிரோட்டத்தை தாங்கி நிற்கிறது.
அரவிந்த் கே.காஷ்யப்பின் கேமரா காடுகள், நீர்வீழ்ச்சி, துறைமுகம் என்று கண்களுக்குள் பிரமிப்பு கூட்டுகிறது.
நடிப்புடன் இயக்கமும் செய்த ரிஷப் ஷெட்டி முந்தைய காந்தாரா மூலம் கிடைத்த வெற்றியை இதிலும் தக்க வைத்துக் கொள்கிறார்.நல்ல தலைவன் கிடைத்தால் நாடெ ன்ன, காடும் வாழும் என்பதை விறு விறு வேக நடையில் யl தந்து இயக்குனராகவும் வெற்றி பெற்று இருக் கிறார்.