சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் சசிகுமாருக்கு சிறந்த நடிகர் விருது

சென்னை சர்​வ​தேசத் திரைப்பட விழா டிச.11-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி நிறைவடைந்​தது. இந்தோ சினி அப்​ரிசி​யேஷன் பவுண்​டேஷன் தமிழக அரசுடன் இணைந்து நடத்​திய இந்த 23-வது பட விழா​வில் 51 நாடு​களைச் சேர்ந்த 122 திரைப்​படங்​கள் திரை​யிடப்​பட்​டன.
தமிழில் அலங்​கு, பிடிமண், மாமன், மருதம், பறந்து போ, காதல் என்​பது பொது உடைமை, மெட்​ராஸ் மேட்​னி, ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்​ராஸ், வேம்​பு, டூரிஸ்ட் பேமிலி,
பாட்​ஷா, 3பிஹெச்கே ஆகிய 12 திரைப்​படங்​கள் திரை​யிடப்பட்​டன.
நிறைவு விழாவில் விருதுகள் வழங்​கப்​பட்​டன.இதில் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்​தில் நடித்த சசிகு​மாருக்​குச் சிறந்த நடிகருக்​கான விருது வழங்​கப்​பட்​டது. சிறந்த நடிகைக்​கான விருது, ‘காதல் என்​பது பொது​வுடைமை’ படத்​துக்​காக லிஜோமோல் ஜோஷுக்கு வழங்​கப்​பட்​டது. சிறந்த தமிழ்ப்​படத்​துக்​கான விருது ராமின் ‘பறந்து போ’ படத்​துக்கு வழங்​கப்​பட்​டது.
மற்ற விருதுகள் வருமாறு :
இரண்​டாவது சிறந்த படம் – டூரிஸ்ட் ஃபேமலி,
சிறப்பு ஜூரி விருது- காளி வெங்​கட் (மெட்​ராஸ் மேட்​னி), சிறப்பு ஜூரி விருது – ஷீலா ராஜ்கு​மார் (வேம்​பு), சிறந்த ஒளிப்​ப​தி​வு – எஸ்​.​பாண்டி குமார் (அலங்​கு)
சிறந்த எடிட்​டர் – நாகூர் ராமச்​சந்​திரன் (மாயக்​கூத்​து).

விழா​வில் எம்​ஜிஆர் அரசினர் திரைப்​படக் கல்​லூரி மாணவர்​கள் தயாரித்த ‘கற்​பி’ குறும்​படத்​துக்​குச் சிறப்பு விருது வழங்​கப்​பட்​டது. தமிழ்​நாடு திரைப்பட இயக்​குநர்​கள் சங்​கத் தலை​வர் ஆர்​.​வி.உதயகு​மார், ஸ்பெ​யின் நாட்​டின் துணைத் தூதர் ஆண்​டனி லோபோ, அமைப்​பின் தலை​வர் சிவன் கண்​ணன், துணைத் தலை​வர் ஆனந்த் ரங்​க​சாமி, பொதுச்​செய​லா​ளர் தங்​க​ராஜ் உடனிருந்​தனர்.