நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் பட நிறுவனம் ரஜினி நடிக்கவுள்ள அடுத்த படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தை இயக்க முதலில் டைரக்டர் சுந்தர் சி ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் ஒப்பந்தமான ஒரே வாரத்தில் படத்தில் இருந்து விலகிக் கொண்டார். ரஜினிக்கு கதை பிடிக்கவில்லை அதனால் சுந்தர்.சி விலகிக் கொண்டதாக கமல் தரப்பில் சொல்லப்பட்டது.
இதைத் தொடர்ந்து ரஜினிக்கு கதை சொல்ல டிராகன் வெற்றிப்பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, தேசிய விருதுகளை வென்ற பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் உள்ளிட்ட சில இயக்குனர்கள் ரஜினியிடம் கதை சொன்னதில்,
அஸ்வத் மாரிமுத்து சொன்ன கதைக்கு ஓகே சொல்லி இருக்கிறார் ரஜினி.
தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தை முடித்ததும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள்.