*’மார்க்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் நடிகை தீப்ஷிகா சந்திரன்

’மார்க்’ படத்தின் மூலம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் நடிகை தீப்ஷிகா சந்திரன் தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக அறிமுகமாகி இருக்கிறார்.

‘மார்க்’ படத்தில் தீப்ஷிகா வலிமையான வெரைட்டியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகையாக வேண்டும் என்ற லட்சியத்தோடு திரைத்துறைக்குள் நுழைந்திருப்பவரான தீப்ஷிகா நடிப்புக்கு தீனி போடும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் அதிக விருப்பம் இருப்பதாக சொல்கிறார். அர்த்தமுள்ள கதைகள் தான் நடிகர்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என்கிறார், நம்பிக்கையுடன்.

’மார்க்’ படத்தில் நடித்துள்ள அனுபவம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது. “என் மீது நம்பிக்கை வைத்து என் நடிப்பு திறமைக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் அவர்களுக்கு நன்றி. இந்தப் படத்தின் இயக்குநர் விஜய் கார்த்திகேயாவின் தெளிவும் வழிகாட்டுதலும் இந்த கதாபாத்திரத்தை திறமையுடன் கையாள உதவியது. மேலும் நடிகர் கிச்சா சுதீப்பின் ஊக்குவிப்பும், அக்கறையும் சக நடிகாராக எனக்கு தேவையான தன்னம்பிக்கை கொடுத்தது. ஒட்டுமொத்த படக்குழுவும் ஆதரவு கொடுத்தனர். ‘மார்க்’ திரைப்படம் உணர்வுப்பூர்வமாகவும் கிரியேட்டிவாகவும் பார்வையாளர்களுக்கு முழுமையான படமாகவும் இருக்கும்” என்கி றார்.