வா வாத்தியார் -திரை விமர்சனம்

மக்கள் திலகம் எம் ஜி ஆர் இறந்த அதே நாளில், அதே நேரத்தில் எம்ஜிஆர் பக்தரான ராஜ் கிரணுக்கு பேரன் ( கார்த்தி) பிறக்கிறான். இதனால் எம்ஜிஆரே தனக்கு பேரனாக வந்து பிறந்திருக்கிறார் என நம்பும் தாத்தா, தனது ஒவ்வொரு சொல்லிலும் செய லிலும் பிரதி பலிக்கும் எம்ஜிஆரின் குண நலன்களை பேரனுக்குள்ளும் இடப்பெயர்ச்சி செய்கிறார். தாத்தாவின் விருப்பப்படியே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகும் கார்த்தி,

ஒருகட்டத்தில் தாத்தா காட்டிய எம் ஜி ஆர். பாதையில் சென்றால் வசதியாக வாழ முடியாது என நினைக்கும் கார்த்தி, இப்போது நம்பியாராக மாறுகிறார். நேர்மை என்றால் என்ன நியாயமா, அது எப்படி இருக்கும்? என்று கேட்கிற அளவுக்கு மாறிப் போகிறார்.

தாத்தாவிடம் மட்டும் நேர்மையான போலீசாக நடிப்பதும், வெளியே லஞ்சம் வாங்கி குவிப்பதுமாய் இரு வேறு மன நிலையில் இருக்கிறார்.

இந்நிலையில் கோடீஸ்வர தொழிலதிபர் சத்யராஜின் கார்ப்பரேட் நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தை நிறுத்த ‘வாங்கிய’ விசுவாசத்திற்கு உண்மையாக செயல்படுகிறார்.

ஒரு கட்டத்தில் பேரன் நாம் நினைத்தபடி எம்ஜிஆரின் அறவழியில் செல்லவில்லை என்பதை தெரிந்துகொள்ளும் தாத்தா, அந்த அதிர்ச்சியில் உயிரை விட்டு விடுகிறார்.

இதன் பிறகு தாத்தா தனது உயிருக்கு மேலாக நேசித்த எம்ஜி ஆரே அவரது பேரனை நல்வழிப்படுத்த களம் இறங்குகிறார். அது எப்படி என்பது சுவாரசிய திரைக்கதை.

கரப்ஷன் போலீஸ் அதிகாரியாக வரும் கார்த்தி அநீதிக்கு துணை போகும் காட்சிகளில் அசால்ட் டாக வந்து ஆச்சரியப்படுத்துகிறார். தாத்தாவின் மறைவிற்கு மறைவுக்கு பிறகு அவருக்குள் நேரும் புதிய மாற்றம் திரை முழுக்க புது எனர்ஜியை கொண்டு வந்து விடுகிறது. குறிப்பாக எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு கார்த்தியின் உடல் மொழி மற்றும் நடிப்பு எம்.ஜி.ஆரை மீண்டும் திரையில் தரிசித்த உணர்வை கொடுக்கும்.

நாயகியாக நடித்திருக்கும் கிருத்தி ஷெட்டி தனது கேரக்டரை அழகுற செய்து இருக்கிறார். கார்த்தியிடம் நேர்ந்த புதிய மாற்றத்தை அவர் உணரும் இடங்கள் தேர்ந்த நடிப்பின் அடையாளம்.
எம்.ஜி.ஆரின் அதி தீவிர ரசிகராக வரும் ராஜ்கிரண், வழக்கம் போல் தனது அழுத்தமான நடிப்பு முத்திரையை பதித்து விடுகிறார்.

வில்லனாக மீண்டும் சத்யராஜ். தகடு தகடு ரேன்ஜூக்கு தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் புதிய சத்யராஜை உணர வைக்கிறார்.

அவரது மகளாக வரும் ஷில்பா மஞ்சுநாத், வரும் குறைந்தபட்ச நேரத்திலும் தனது திரை இருப்பை நிரூபிக்கிறார். நிழல்கள் ரவி, ஆனந்தராஜ், ஜி.எம்.சுந்தர், ரமேஷ் திலக், கருணாகரன், பி.எல்.தேனப்பன், யார் கண்ணன், நடித்திருக்கும் பாபி சிம்ஹா பொருத்தமான பாத்திரத்த தேர்வுகளில் பிரகாசிக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்சின் கேமரா, காட்சிகளின் துல்லியத்தில் படத்திற்கு இன்னொரு பலம் ஆகி விடுகிறது. குறிப்பாக கார்த்தியின் எம்ஜிஆர். மேனேசம் தொடர்பான காட்சிகள் இவரது கேமராவில் ‘வாவ்’ ரகம்.

சந்தோஷ் நாராயணின் இசையில் வரும் பாடல்களை விட, திரை நெடுக அப்போது வந்து போகும் எம் ஜி ஆர் பாடல்கள் பரம சுகம். எம்ஜிஆரின் ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடலை ரீமிக்ஸ் என்ற பெயரில் இப்படி சிதைத்திருக்க வேண்டாம்.

எழுதி இயக்கியிருக்கும் நலன் குமாரசாமி, தமிழக மக்களின் இதயங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் எம்ஜிஆரின் மனிதநேய மாண்புக்கு கார்த்திக்கின் கேரக்டர் மூலம் புதிய திரைப்படம் வடிவம் கொடுப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

முதல் பாதி முழுவதும் கார்த்தியின் ராஜாங்கம், மறுபாதி முழுக்க எம்ஜிஆரின் ராஜபாட்டை என கதைக்கு புது வர்ணம் பூசியதில் படம் பளிச்சென்றாகி விடுகிறது. உடையது படம் பளிச்சந்தாகி விடுகிறது சில இடங்களில் சிறு தொய்வு ஏற்பட்டாலும், அதை கார்த்தியின் அர்ப்பணிப்பு நடிப்பு மறக்கடித்து விடுகிறது.

மொத்தத்தில், ‘வா வாத்தியார்’ மக்கள் திலகத்தின் புதிய விஸ்வரூபம்.